சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் | Homemade Kashayam for Cold and Cough in Tamil
நாம் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு பல இங்கிலீஷ் மருந்துகளை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றோம்..! சளி, இருமல் என்று மருத்துவர்களிடம் சென்றாலே மருத்துவர்கள் பல இங்கிலீஷ் மருந்துகளை தான் நமக்கு முதலில் பரிந்துரை செய்கின்றன, இங்கிலீஷ் மருந்துகளை காட்டிலும் நம் பாட்டிகள் சொல்லி
கொடுத்த நாட்டு வைத்தியம் மிகவும் சிறந்தது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயன் தரக்கூடியது. நம் பாட்டிகள் அக்காலத்தில் தீராத பல நோயிகளுக்கு வீட்டிலேயே எளிதான முறையில் மருந்துகளை தயார் செய்து நோயிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அந்த அளவுக்கு நம் பாட்டிகளின் கைப்பக்குவங்கள் இருக்கும் என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். எண்ணற்ற பல இயறக்கை மருத்துவக் குறிப்புகளை நம் பாட்டிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம், அவற்றுள் நாம் இங்கு பார்க்க இருக்கும் மருத்துவ குறிப்பு சளி, இருமல் தொந்தரவுகளுக்கு தீர்வு பற்றி தான். இந்த பயனுள்ள மருத்துவ குறிப்பை பயன்படுத்தி சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழுங்கள் மக்களே. மருந்தினை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சளி இருமல் குணமாக தோசை இட்லியில் இதை தொட்டு சாப்பிடுங்கள்..!
சளி இருமல் கசாயம் தயாரிப்பு முறை | How to Cure Cold and Cough in One Day in Tamil:
தேவையான பொருள்கள்:
● ஒரு கைப்பிடி அளவு – துளசி
● ஒரு கைப்பிடி அளவு – தூதுவளை
● கற்பூரவல்லி இலை – 3
● சின்ன வெங்காயம் – 1
● சீரகம் – 1/2 ஸ்பூன்
சளி இருமல் கசாயம் செய்முறை:
- முதலில் இடிகல் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இடிகல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரை பயன்படுத்தி அரைத்துக்கொள்ளலாம்.
- இடிக்கல்லில் சீரகம், சின்ன வெங்காயம், தூதுவளை போன்றவற்றை முதலில் சேர்த்து லேசாக மசித்து அதனுடன் துளசி மற்றும் கற்பூரவல்லி இலைகளையும் சேர்த்து லேசாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மசிக்கும் போது நன்கு மசிக்காமல் லேசான விழுது போன்று மசித்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் மசித்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். 2 அல்லது 3 நிமிடங்கள் வரை நன்கு கொதித்த பின்னர் இறக்கி விட வேண்டும். பிறகு அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மருந்து தயார்.
- இந்த மருந்தினை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சிறியவர்களாக இருந்தால் 5ml வரை மருந்தினை கொடுக்கலாம். - இம்மருந்தினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!
மருந்தின் பயன்கள்:
சளி
இருமல்,
மூக்கடைப்பு
தொண்டை கட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு இம்மருந்து தீர்வாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |