தேன் நன்மைகள் | Honey Benefits in Tamil

Advertisement

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of Honey in Tamil

இயற்கையானது பல பொருட்களை நமக்கு தந்துள்ளது. அதிலும் தேனில் அதிகமாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தேன் வைத்து குணப்படுத்த முடியாத பல நோய்களையும் குணப்படுத்திவிடலாம். சுத்தமான தேனில் 70 வகையான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. தேன் பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். நூற்றில் ஒரு சிலருக்கு மட்டும் தேன் பிடிக்காமல் இருக்கலாம். தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீர் தன்மை கொண்டது. தேன் வகைகளில் மனுகா, பக்வீட், வைல்ட்ஃப்ளவர், அல்ஃபாஃபா, ப்ளூபெர்ரி, ஆரஞ்சு ப்ளாஸ்ஸம், க்ளோவர் போன்ற தேன் வகைகள் உள்ளன. தேனானது சரும அழகிற்கு, கூந்தல் பராமரிப்பு போன்ற ஆரோக்கிய சம்மந்தத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையான தேன் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

வால் மிளகு மருத்துவ குணங்கள்

உடல் எடை குறைய தேன்:

உடல் எடை குறைய தேன்

தேனில் இருக்கக்கூடிய தனித்துவமான இனிப்பு அதிக உடல் எடையை குறைக்க உதவும் நல்ல மருந்து. நாம் குடித்து வரும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து வந்தால் உடலில் பல நன்மைகள் கிடைக்கும். காலை மற்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சூடான பாலில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேனை கலந்து குடித்து வர உடல் இழைப்புக்கு மற்றும் உடலுக்கும் பல நன்மைகள் தரும்.

சளி இருமல் குணமாக:

சளி இருமல் குணமாக

நாள்பட்ட இருமலுக்கு நல்ல நிவாரணமாக இருப்பது தேன். குழந்தைகளுக்கு இருமல் தொந்தரவு இருந்தால் இரவில் தேன் கொடுத்து வர இருமலிலிருந்து விடுபட்டு நல்ல தூக்கம் கிடைக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு தேன் கொடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டப்பிறகு தேனினை கொடுக்கலாம். இருமலால் பாதிப்படைந்த சிறிய குழந்தைகளுக்கு இரவில் படுக்கைக்கு முன்பு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேன் கொடுத்து வர சளி மற்றும் இருமல் தொல்லை நீங்கி நல்ல நிம்மதியான உறக்கம் கிடைக்கும். 

நீரிழிவு நோய் குணமாக:

நீரிழிவு நோய் குணமாக

தேனில் குளுக்கோஸ் அளவானது 45 முதல் 64 வரை மாறுபடுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் தேனை சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும். தேன், உடலின் திரவத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை (குறைந்தது 8 மணி நேரங்களுக்குள்ளாக) குறைக்க உதவும். சர்க்கரை நோய் உடலில் அதிகம் இருப்பவர்கள், அரைக்கரண்டி தேனினை தேநீர், ஓட்ஸ் உணவு அல்லது யோகார்ட்டில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சருமத்தை அழகாக்க தேன் ஃபேஸ் பேக்..!

காயம் மற்றும் தீக்காயங்கள் ஆற:

காயம் மற்றும் தீக்காயங்கள் ஆற

சிலருக்கு அடிக்கடி காயங்கள், தீக்காயம் போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும். நாளடைவில் அது ஆறாமல் அப்படியே தழும்பாக மாறிவிடும். இதற்கு தேனினை காயங்கள் மீது தடவி வர காயம் விரைவில் ஆறிவிடும். தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் முதலில் தண்ணீரால் கழுவிய பிறகு, அதன் மீது தேனை தடவலாம்.

உயர் இரத்த அழுத்தம் குறைய:

உயர் இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தத்தைக் குறைப்பது என்பது ஒருவகையான ஆரோகிய பிரச்சனையாகும். இத்தகைய பிரச்சனையை நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றினால், உயர் இரத்த அழுத்தத்தைப் குறைக்க முடியும்! உடலில் அதிகமாக உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தேன் சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து விடலாம். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement