How Many Kilometer A Human Should Walk In A Day In Tamil
மனிதர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க நடையிற்சி தான் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த வித உடல் பாதிப்புகளும் ஏற்படாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் ஒரு அரை மணி நேரம் ஆவது நடைப்பயிற்சி செய்வார்கள். இது அவர்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதய பாதிப்பு இருப்பவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது நடைப்பயிற்சி தான். மற்ற உடற்பயிற்சிகளை விட நடைப்பயிற்சி தான் சிறந்ததாக இருக்கிறது.
தினமும் நடைப்பயிற்சியை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் இந்த பதிவை கட்டாயம் பாருங்கள். இது உங்களுக்கான பதிவு தான். இந்த பதிவில் உங்கள் வயதிற்கேற்ப நீங்கள் எவ்வளவு தூரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 10 நன்மைகள் என்ன தெரியுமா..?
நடைப்பயிற்சி:
உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உங்கள் உடலில் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
பெரியவர்கள் நடக்க வேண்டிய தொலை அளவு:
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 10,000 காலடிகள், அதாவது 8 கிலோமீட்டர் நடக்க வேண்டும். நீங்கள் இப்பொழுதான் புதிதாக நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்குறீர்கள் என்றால், முதல் நாள் 2 கிலோமீட்டர், அடுத்த நாள் 4 கிலோமீட்டர், அதற்கு அடுத்த நாள் 6 கிலோமீட்டர், கடைசியாக 8 கிலோமீட்டர் என்று கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நடைப்பயிற்சி தொலை தூரத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் ஆரம்பத்திலேயே உங்களால் தொலைதூரம் நடைப்பயிற்சி செய்ய முடியாது என்ற காரணத்தால் இப்படி செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உங்களால் முடிந்த வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வயதுக்கேற்ற நடைப்பயிற்சி:
பொதுவாகவே குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடி கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் தினமும் ஓடி ஆடி விளையாடுவது அவர்கள் உடலுக்கு பெரும் நற்பலன்களை தருகிறது. இன்றைய காலத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் பெரிதாக விளையாட விடுவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை தினமும் ஒரு மணி நேரம் ஆவது விளையாட விட வேண்டும். 6 முதல் 17 வயது குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாடினாலே போதும் அவர்களுக்கு நடைப்பயிற்சி எதுவும் தேவைப்படாது.
முதியோர் நடக்க வேண்டிய தொலை அளவு:
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 முதல் 3 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அதிகபட்சமாக 4 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சி செய்யலாம். குறைந்தபட்சம் ஒவ்வொரு வேலையும் சாப்பாட்டிற்கு பிறகு 10 நிமிடங்கள் ஆவது நடைப்பயிற்சி செய்வது உங்கள் செரிமான பிரச்சனைகளை முழுவதும் தீர்க்கும். இதனால் உங்களுக்கு இருக்கும் நோய்களின் அபாயங்கள் நீங்கும்.
நடைபயிற்சியின் நன்மைகள்:
- உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். உடல் எடையை குறைப்பதற்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும்.
- உயர் ரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
- எலும்புகளை வலுவாக்கும். எலும்பு ஆரோக்கியத்தை மோசமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
- மன சோர்வு மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மனநிலை ஆரோக்கியமாக இருக்கும்.
- மாலை மற்றும் இரவு நேர நடைபயிற்சி தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்யும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
- கால் தசைகள் வலுவாகும். கணுக்கால்கள், மூட்டுகள் உறுதியாகும். முதுகு வலி, மூட்டு வலி நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா நடைப்பயிற்சி எவ்வளோ நன்மை என்று..! Walking Benefits in Tamil
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |