அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ஒரு நாளைக்கு நீங்கள் சிறுநீர் கழிப்பதை வைத்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறியலாம். நம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவது முக்கியமானது. சிறுநீர் கழிப்பதற்கு முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீரை கழிக்க வேண்டும் என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்:
நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிப்பதை வைத்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை கண்டறியலாம்.
ஒரு நாளைக்கு 4 முதல் 10 முறை சிறுநீர் கழிக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலியோ, எரிச்சலோ ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும். சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருக்க கூடாது. குறைந்தது 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அடக்கி வைக்கலாம். எப்படியென்றால் சிறுநீர்பையின் அளவு 2 கப் சிறுநீர் அடங்கியதாக தான் இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம்
சிறுநீர் கழிக்கும் இடைவெளி:
இரவு நேரத்தில் சில நபர்கள் எழுந்திருப்பார்கள், சில நபர்கள் தூங்கினால் காலையில் தான் எழுந்திருப்பார்கள். அப்படி இரவில் 2 முறை சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. அதுவே 2 தடவைக்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம்.
சிறுநீரை அடக்கி வைத்திருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் அதிக நேரம் அடக்கி வைத்திருந்தால் உடலில் பிரச்சனை ஏற்படும். அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் சிறுநீர் பையில் பிரச்சனை ஏற்படும்.
எப்பொழுதும் போல் சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. வழக்கத்திற்கு மாறாக திடீரென அதிகமாக கழித்தால் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது வலியோ, எரிச்சலோ, அல்லது சிறுநீரின் நிறம் மாறியிருந்தாலோ மருத்துவர் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் வர காரணம்:
அடிக்கடி சிறுநீர் வருவதற்கு அதிக நீரை குடிப்பதாலும், அல்லது குளிர்ந்த சூழ்நிலை போன்ற காரணங்களால் ஏற்படும். சிறுநீர் பையில் கற்கள் இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் வரும். இதில் உள்ள எந்த பிரச்சனையும் இல்லை இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறேன் என்றால் அதனை எப்படி தடுப்பது என்று யோசித்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க சில வழிகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |