உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் முட்டையை சாப்பிடுவதற்கு முன் அதிலுள்ள புரதம் மற்றும் கலோரிகளை தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement

முட்டையில் உள்ள சத்துக்கள்

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவில் கண்டிப்பாக முட்டை சேர்த்து கொள்வீர்கள். ஆனால் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்று உள்ளது. அதற்கு நீங்கள் முட்டையில் உள்ள சத்துக்கள், கலோரிகள், புரதங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் சரியான அளவில் முட்டையை எடுத்து கொண்டு உடல் எடையை அதிகரிக்க முடியும். உங்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவில் முட்டையில் உள்ள புரதங்கள் மற்றும் கலோரிகளை தெரிந்து கொள்வோம்.

ஒரு முட்டையில் உள்ள சத்துக்கள்:

 முட்டையில் உள்ள சத்துக்கள்

ஒரு முட்டையின் வெள்ளை கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆக ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.

ஒரு முட்டையில் உள்ள கலோரிகள்:

ஒரு சிறிய முட்டையில் 55 கலோரிகள் உள்ளது. பெரிய முட்டையில் 80 கலோரிகள் உள்ளது. நடுத்தரமான முட்டையில் 66 கலோரிகளும் உள்ளது. 

இதையும் படியுங்கள் ⇒ தினமும் அவித்த முட்டை சாப்பிடலாமா.! அப்படி சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா..!

ஒரு முட்டையில் உள்ள புரதம்:

 

ஒரு முட்டையில் 6 -7 கிராம் புரதம் சத்து உள்ளது. இது முட்டையின் அளவை பொறுத்து மாறுபடும். சிறிய முட்டையில் 4.79 கிராம் புரதம் உள்ளது. நடுத்தர முட்டையில் 5.54 கிராம் புரதம் உள்ளது. பெரிய முட்டையில் 6.3 கிராம் புரதம் உள்ளது.

ஒரு முட்டையில் வெள்ளை கருவில் 3.6 கிராம் புரதமும், மஞ்சள் கருவில் 2.7 கிராம் புரதமும் உள்ளது.

மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதம்:

 மனிதன் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு சத்துக்களில் புரதமும் ஒன்று. அதனால் சராசரியாக  ஒரு நாளில் ஆண்களுக்கு 56 கிராம் புரதமும், பெண்களுக்கு 46 கிராம் புரதமும் தேவைப்படுகிறது.  

புரத சத்து குறைபாடு அறிகுறிகள்:

  • திடிரென்று எடை குறைதல்
  • முடி உதிர்வு
  • உடல் சோர்வாக இருப்பது
  • தோலில் அலர்ஜி
  • தசைகளில் வலி ஏற்படும்

புரதசத்து குறைபாட்டினால் வரும் பிரச்சனைகள்:

எலும்புகளில் பிரச்சனை:

உடலில் புரதசத்து குறைந்தால் எலும்புகளில் பிரச்சனை ஏற்படும். அதாவது எலும்பு தேய்மானம், கால் வலி, தசைகளில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கல்லீரல் பிரச்சனை:

புரத சத்து உடலில் போதுமான அளவு இல்லையென்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்.

இதையும் படியுங்கள் ⇒ தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன பயன்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement