How to Increase Body Strength in Tamil
பொதுவாக ஒரு சிலர் நான் நன்றாக தான் சாப்பிடுகின்றேன் ஆனாலும் எனக்கு உடல் மிகவும் வலிமை இழந்தது போலவும் சோர்வாகவும் உணர்கின்றேன். என்னால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாமல் போகின்றது. அதனால் இந்த சோர்வினை போக்கி உடலை எவ்வாறு வலிமை பெற செய்வது என்றே தெரியவில்லை என்றெல்லாம் கூறுவதை நாம் கேட்டிருபோம். ஏன் உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கலாம். அப்படி உங்களுக்கும் உடல் வலிமை இழந்து சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உடல் சோர்வை போக்கி உடலை வலிமை பெற உதவும் சில குறிப்புகளை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உடல் வலிமை பெற ஒரு வாரத்திற்கு இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க
How to Increase Strength in Body Naturally in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உடல் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்று விரிவாக பார்க்கலாம். அதற்கு முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கசகசா – 2 டீஸ்பூன்
- வால்நட் – 10
- சாரா பருப்பு – 2 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 10
- பிஸ்தா பருப்பு – 10
- பாதாம் – 10
- பால் – 1 டம்ளர்
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கசகசா, 2 டீஸ்பூன் சாரா பருப்பு, 10 வால்நட், 10 முந்திரி பருப்பு, 10 பிஸ்தா பருப்பு மற்றும் 10 பாதாம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் பாலினை ஊற்றி அதனுடனே அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இரவு உறங்க செல்வதற்கு முன்னால் இதனை பருகுங்கள். இவ்வாறு தினமும் உறங்க செல்லுவதற்கு முன்னால் இதனை பருகுவதன் மூலம் உங்கள் உடல் நன்கு வலிமை பெறுவதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்
How to Increase Body Power in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பாதாம் – 50 கிராம்
- நெய் – 25 மி.லி
- தேன் – 100 மி.லி
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் பாதாமினை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அதனின் தோலினை நீக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 25 மி.லி நெய்யை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள பாதாம் பசையினை மற்றும் 100 மி.லி தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
இதனை தினமும் தொடர்ந்து மூன்று வேலையும் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு வருவதன் மூலம் உங்களின் உடல் நன்கு வலிமை பெறுவதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள் => எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |