ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

தொப்பை குறைய உணவு முறைகள்

தொப்பை குறைய இயற்கை வைத்தியம்..!

தொப்பை குறைய உணவு முறைகள்

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க (Belly Fat) ஆசையா அப்போ, இவற்றில் இருக்கும் சில டிப்ஸை செய்தாலே போதும். ஒரே வாரத்தில் தொப்பையை எளிதாக குறைத்து விட முடியும். சரி வாங்க தொப்பையை எப்படி குறைப்பது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

தொப்பை குறைய இயற்கை வைத்தியம்

நன்றாக தூங்கவும்:

நாம் நன்றாக தூங்கினால் தான் நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நல்ல தூக்கத்துடன் தூங்கும் போது நாம் குப்பற படுத்து தூங்கினோம் என்றால் தொப்பை குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே தினமும் தூங்கும் போது குப்பற படுத்து தூங்கவும். இவ்வாறு செய்து வந்தால் தொப்பையை ஒரு வாரத்திலேயே குறைத்து விட முடியும்.

தொப்பை குறைய உணவு முறைகள் – உணவில் அதிகம் காய்கறிகளை சேர்த்து கொள்ளவும்:

அதாவது தினமும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகளவு சேர்த்து கொள்ளவும். குறிப்பாக ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால் தொப்பையும் குறையும் (Belly Fat) உடல் எடையும் குறையும்.

தொப்பை குறைய உணவு முறைகள் – கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து கொள்ளவும்:

கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளை தினமும் அதிகளவு உட்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக ஜங்க் புட் ஆன நொறுக்கு தீனிகள், பீசா, பர்கர் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

எளிய உடல் பயிற்சி:

அதாவது நேரம் கிடைக்கும் போது எல்லாம் எளிய உடல் பயிற்சியனை செய்ய வேண்டும். அதாவது இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன் புறமாக அழுத்துவது போன்ற எளிய பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து (Belly Fat) விட முடியும்.

தொப்பை குறைய உணவு முறைகள் – பொட்டாசியம் உணவுகள்:

தினமும் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பொட்டாசியம் குறைப்பாடு இருந்தால் தொப்பை போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே தினமும் அதிகளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவறாமல் உண்டு வரவும்.

தொப்பை குறைய உணவு முறைகள் – நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகளவு உண்டு வரவும்:

தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவு சாப்பிட்டு வர வேண்டும்.

குறிப்பாக ஓட்ஸ், பிரௌன் பிரெட் மற்றும் ரொட்டி போன்றவற்றை தினசரி உண்டு வந்தால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விட முடியும்.

நடக்கவும்:

எதற்கெடுத்தாலும் வெளியே செல்வதற்கு வாகனத்தை பயன்படுத்தாமல், நடந்து செல்லவும். தினமும் நடந்து செல்வதினால் கால்களும் வலிமை பெரும். தொப்பையும் எளிதில் குறைந்து விடும்.

தொப்பை குறைய உணவு முறைகள் – நீர்ச்சத்துள்ள பழங்கள்:

நீர்ச்சத்துள்ள பழங்களை தினமும் அதிகளவு சாப்பிட்டு வரவும். அதாவது தர்பூசணி, பேரிக்காய் போன்ற பழம் தினமும் பசி எடுக்கும் போது சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துவதோடு, தொப்பை வராமல் இருக்கவும் உதவுகிறது.

மெதுவாக சாப்பிட வேண்டும்:

எப்போதும் உணவை ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போது தான் தேவையான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் சேரும்.

அதுமட்டும் இன்றி நம் சாப்பிடும் உணவில் தேவையற்ற கொழுப்பு இருந்தால் அவற்றை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. தொப்பையும் நமக்கு வராது.

தினமும் வாய்விட்டு சிரிக்கவும்:

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழி போல.

தினமும் நாம் வாய்விட்டு சிரித்து வந்தால் நம் வயிற்றில் இருக்கும் தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். தொப்பை போடுவதையும் தவிர்த்து கொள்ள முடியும்.

சைக்கிள் ஒட்டவும்:

தினமும் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ௐட்டி வந்தால், உடல் எடையையும் குறைக்க முடியும். தொப்பையும் போடாது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் தொப்பையை குறைத்து விட முடியுமா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்