ஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..!

belly fat

தொப்பை குறைய எளிய வழிகள்

தொப்பை (belly fat) வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.எனவே ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்கவழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்கின்றது என்றால் எந்த ஒரு உடல் பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை.

சரி வாருங்கள் இவற்றில் தொப்பை குறைய எளிய வழிகள் என்ன உள்ளது என்று நாம் காண்போம்.

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

தொப்பை குறைய வைத்தியம் – அன்னாசிப்பழம்:

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு, கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.

காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை (belly fat) காணாமல் போய்விடும்.

தொப்பை குறைய வைத்தியம் – இஞ்சிசாறு:

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் (belly fat) கொழுப்பு குறையும்.

தொப்பை குறைய 15 வழிகள்..! இதை விட சிறந்த டிப்ஸ் இல்லை

தொப்பை குறைய வைத்தியம் – தண்ணீர்:

தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் (belly fat) கொழுப்பு குறைந்துவிடும்.

தொப்பை குறைய வைத்தியம் – உப்பு:

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தொப்பை குறைய வைத்தியம் – தேன்:

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

(குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம்.

எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

தொப்பை குறைய வைத்தியம் – பட்டை:

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

தொப்பை குறைய வைத்தியம் – நட்ஸ்:

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம்.

உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் – அவகேடோ:

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது.

மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் – சிட்ரஸ்:

பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.

இதனால் அழகான உடலை பெற முடியும்.

தொப்பை குறைய வைத்தியம் – தயிர்:

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் – க்ரீன் டீ:

அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர்.

எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

தொப்பை குறைய வைத்தியம் – சால்மன் மீன்:

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, (belly fat) தொப்பை வராமலும் தடுக்கும்.

தொப்பை குறைய டிப்ஸ் – பெர்ரிப் பழங்கள்:

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

தொப்பை குறைய வைத்தியம் – ப்ராக்கோலி:

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும், பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் – எலுமிச்சை சாறு:

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான்.

அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

தொப்பை குறைய டிப்ஸ் – பூண்டு:

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது.

எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் – இஞ்சி:

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்