ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Lose Weight Naturally at Home Remedy in Tamil

தினமும் நமது பதிவின் மூலம் அனைவருக்கும் பயனுள்ள ஆரோக்கியம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவில் உடல் எடையை எவ்வாறு எளிய முறையில் குறைப்பது என்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் நமது உணவுப்பழக்கங்களில் உள்ள முரண்பாடுகளின் காரணமாகத் தான் நமது உடல் எடை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள  குறிப்புகளை பயன்படுத்தி  உடல் எடையை குறைத்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துபாருங்கள்=> இந்த டிப்ஸ் மட்டும் போதும் 10 நாட்களில் உடல் எடை குறையும்

How to Reduce Weight at Home in Tamil:

How to Reduce Weight at Home in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.

எனவே எளிமையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கான சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சியா விதை (Chia Seeds) – 1 டீஸ்பூன் 
  2. எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் 
  3. தேன் – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – 1 டம்ளர் 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் சியா விதைகளை முதல் நாள் இரவே தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படித்துபாருங்கள்=> உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க

பிறகு அதனுடன் நாம் ஊறவைத்துள்ள 1 டீஸ்பூன் சியா விதைகள், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை குறைவதை நீங்களே காணலாம்.

How to Reduce Weight Naturally in Tamil:

How to Lose Weight Naturally at Home Remedy in Tamil

 

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் 
  2. வெந்தயம் – 2 டீஸ்பூன் 
  3. ஓமம் – 2 டீஸ்பூன் 
  4. தேன் – 1 டீஸ்பூன்
  5. தண்ணீர் – 1 டம்ளர் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டீஸ்பூன் கருஞ்சீரகம், 2 டீஸ்பூன் வெந்தயம், மற்றும் 2 டீஸ்பூன் ஓமம் ஆகிவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படித்துபாருங்கள்=> தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்துக் குடியுங்கள். இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை குறைவதை நீங்களே காணலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil

 

Advertisement