பயணம் செய்யும் போது வாந்தி எடுப்பவர்களுக்கு இதை கொடுத்தால் போதும் வாந்தி வராமல் தடுக்கலாம்..!

Advertisement

How To Stop Vomiting While Travelling in Tamil | பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க

அனைவருக்கும் பயணம் செய்வது பிடிக்கும். ஆனால் ஒரு சிலர் பயணம் செய்வது பிடித்தாலும் கூட அவர்கள் பயணம் செய்வதை தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால், ஒரு சிலருக்கு பேருந்திலோ அல்லது மற்ற வாகனங்களிலோ பயணம் செய்யும் போது வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இக்காரணத்தினால் சிலர் பயணம் செய்வதை தவிர்த்து விடுவர். இருப்பினும் ஒரு சில இடங்களுக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். எனவே அப்படி செல்லும் போது வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ள நபர்கள் இவற்றையெல்லாம் செய்தால் வாந்தி, மயக்கம் போன்றவை வராமல் தடுக்கலாம். ஓகே வாருங்கள் நண்பர்களே, பயணம் செய்யும் போது வாந்தி எடுப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

இரத்த வாந்தி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

What to Do to Prevent Vomiting While Travelling in Tamil:

இஞ்சி:

 பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க

இஞ்சி ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்து என்பது அனைவருக்கும் தெரியும். இதனை பயன்படுத்தி வாந்தி மற்றும் குமட்டலை போக்க முடியும். எனவே நீங்கள் பயணத்தின் போது இஞ்சி டீ குடிக்கலாம் அல்லது ஒரு சிறிய துண்டு இஞ்சியை வாயில் வைத்து கொண்டால் வாந்தி வருவதை தவிர்க்கலாம்.

தண்ணீர் அருந்துவது:

 how to avoid vomiting while travelling in bus in tamil

பயணத்தின் போது போதிய அளவிலான தண்ணீர் அருந்தாமல் இருந்தாலும் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். எனவே, தண்ணீர் அல்லது எலக்ட்ரோலைட் கலந்த பானங்களை அருந்துவது மிகவும் அவசியம்.

புதினா:

 what to do to prevent vomiting while travelling in tamil

பயணம் செய்யும் போது புதினா டீ குடிப்பதன் மூலம் வாந்தி வருவதை தடுக்கலாம். இது ஒரு சிறந்த இயற்கையான பொருளாகும். அதுமட்டுமில்லாமல் இது வயிற்று வலியை போக்கக்கூடியது.

புதிய காற்று பெறுதல்:

 what to eat to stop vomiting while travelling in tamil

நீங்கள் பேருந்திலோ அல்லது காரிலோ செல்லும்போது ஜன்னல் கண்ணாடிகளை திறந்து விட்டு இயற்கையான காற்றினை சுவாசிப்பதன் மூலம் வாந்தி வருவதை தடுக்கலாம்.

பஸ்ல போகும் போது ஏன் வாந்தி வருகிறது தெரியுமா..?

போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்:

பயணம் செய்யும் போது போன் பார்த்தாலோ அல்லது புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்கள் செய்தாலோ தலைசுற்றல், வாந்தி போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே இதனை தவிர்த்து விட்டு தூரத்தில் உள்ள ஒரு நிலையான புள்ளியில் கவனம் செலுத்தி பார்த்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வாந்தி அறிகுறியை குறைக்கலாம்.

அக்குபிரஷர்: 

 how to stop vomiting while travelling in tamil

அக்குபிரஷர் என்பது உடலின் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகும். எனவே குமட்டல் மற்றும் வாந்தியை போக்குவதற்கு இது உதவுகிறது. நீங்கள் பயணத்தின் போது கையின் உள் மணிக்கட்டில் சரியான முறையில் அழுத்தம் கொடுத்து சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம் வாந்தி அறிகுறியை தவிர்க்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement