கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்

கோபம் குறைய வழி

கோபம் குறைவதற்கு என்ன வழி

வணக்கம் பொதுநலம்.காமின் இனிமையான வாசகர்களே. இன்று நம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அது என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். இன்று அனைவருக்கும் உள்ள பிரச்சனை தான் இந்த கோபம். இதை எப்படி சரிசெய்வது கோபத்தை குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம்.

இன்று அனைவருக்கும் அசாத்தியமாக வரக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது கோபம் தான். எதற்காக கோபப்படுகிறோம் என்று தெரியாமலே சிலர் கோபப்படுவார்கள். இப்படி கோபப்படுவதால் என்ன விளைவுகள் வரும் என்று யோசிப்பதற்கு முன்னரே கோபப்படுவார்கள். கோபத்தால் பல விளைவுகளை சந்தித்தாலும் அதனை எப்படி கையாளுவது என்று தெரியாமலே கோபப்படுவார்கள். தன்னிலை மறந்து தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி கோபப்படுகிறீர்கள். இந்த கோபத்தை எப்படி குறைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம்.

மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்

கோபம் வர காரணம்:

கோபம்

கோபம் என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஓர் உணர்வு தான். ஆனால் கோபம் ஒரு வெல்வேறு வடிவத்தில் வெளிவருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிவர கூடும்.

கோபம் தான் உங்களின் முதல் எதிரியே:

கோபத்தைக் குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன. நீங்கள் உங்களுக்கு “முன்னால் இருக்கும் எதிரிகளை வெல்வதை விட உங்களுக்குள் இருக்கும் எதிரிகளை முதலில் வெல்ல வேண்டும்”. உங்களின் கோபம் தான் உங்களின் முதல் எதிரியே. உங்களின் கோபத்தை வென்றாலே உங்கள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகளை பார்க்கலாம்.

நிதானமாக இருக்க வேண்டும்:

Temperance

எல்லா விஷயங்களிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவசரமாக செய்யும் வேலைகளை தவிர்க்கவேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நிதானமாக எதை செய்தாலும் அது வெற்றியடையும். கோபத்தை குறைப்பதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுடைய சோம்பேறித்தனத்தை கோபப்படுவதில் காட்டுங்கள்.

எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள்:

expectation

உங்களுக்கு வேண்டியதை நீங்களே செய்துகொள்ளுங்கள். அதற்கு உங்களுடைய மொத்த உழைப்பையும் பயன்படுத்துங்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களின் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.எதுவாக இருந்தாலும் உங்களால் முடியும் என்று நினையுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள். இது உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த ஒரு வழியாக இருக்கும்.

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

அமைதியை கடைபிடியுங்கள்:

எது நடந்தாலும் அமைதியாக இருங்கள். எல்லா நேரங்களிலும் அமைதியை கடைபிடியுங்கள். அமைதியாக இருந்தால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். கோபம் வரும் போது அமைதி கொள்ளுங்கள். கோபம் வரும் பொது உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். தியானத்தை மேற்கொள்ளுங்கள். தியானம் செய்வதால் உங்கள் கோபம் குறைய வாய்ப்புள்ளது.

உற்சாகமாக இருங்கள்:

Excitement

எந்த பிரச்சனையாக இருந்தாலும் சந்தோஷத்தை கடைபிடியுங்கள். எந்த சூழ்நிலையும் கடந்து போகும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நல்ல உணவுகளை உண்ணுங்கள். நன்றாக தூங்குங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எப்பொழுதும் மனதில் சந்தோசம் கொள்ளுங்கள். சந்தோஷமாக இருப்பதினால் உங்கள் கோபத்தை குறைக்கலாம்.

உங்களை கட்டுப்படுத்துங்கள்:

முதலில் நீங்கள் உங்களை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்களிடம் நீங்களே கேள்வி கேளுங்கள். உங்கள் கோபத்திற்கு காரணம் என்ன? உங்கள் கோபம் நியாயமானதா? இந்த கோபத்தினால் என்ன நடக்கும் என்று உங்களிடம் நீங்களே கேள்வி கேளுங்கள். நீங்கள் காலையில் எழும்போது ஒரு விஷயம் தாமதமாக நடந்துவிட்டால் அந்த நாள் முழுவதும் கோபமாக இருக்காதீர்கள். மறுநாள் முன்பாக எழுந்து அந்த வேலையை செய்யவேண்டும் என்று மனதில் உறுதிசெய்யுங்கள்.

தேவை இல்லாததை மறந்து விடுங்கள்:

உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் இருந்தால் அதை மறந்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டமான செயல்களை பற்றிய எண்ணம் வரும் போது அதை மறந்துவிடுங்கள். சந்தோஷமான எண்ணங்களை மட்டுமே மனதில் வைத்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்