இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

இரத்த அழுத்தம் குறைய

How to reduce blood pressure naturally..!

இரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவம்: இன்று அனைவரும் இரத்த அழுத்தம், நோய் என்று கருதி மருந்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே சிந்திப்பது இல்லை. இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

அதிக உடல் உழைப்பின் போதும் மன அழுத்தத்தின் போதும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதய நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரத்த அழுத்தம். ஆம் அதிக இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியாது என்பதால், இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (Cancer Fighting Foods)..!

 

சரி இந்த ரத்த அழுத்தம் குறைய (how to reduce blood pressure naturally) உதவும் 10 வழிகளை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க…

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம் – நடைப்பயிற்சி:

இந்த இரத்த அழுத்தம் குறைய தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

இரத்த அழுத்தம் குறைய – எடை குறைதல்:

அதிக உடல் எடையும் கூட ரத்த அழுத்தம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே உடல் எடையைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

எடை குறைக்கும் போது, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சரியான ரத்தப்போக்கிற்கு உதவும். இதன் மூலம், இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதிக்கு ரத்தம் சீராகப் பாய உதவும்.

இரத்த அழுத்தம் குறைய – புகை மற்றும் மதுப்பழக்கம்:

புகை பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இரண்டும் இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பிடிப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணியாக உள்ளது.

ஆல்கஹால் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே இந்த பழக்கங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இரத்த கொதிப்பு குணமாக

இரத்த அழுத்தம் குறைய – காபி குடிப்பதை தவிர்த்தல்

தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை தூண்ட செய்யும் காரணியாகும்.

எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ளவும்.

இரத்த அழுத்தம் குறைய – சீரான டயட்:

சீரான உணவுப்பழக்கம் ரத்த அழுத்தம் குறைய (how to reduce blood pressure naturally) உதவும். உணவில் பெர்ரி பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம், அதில் இருக்கும் பாலிபீனால்கள், உடல்நலத்தைக் காக்கும். உடல் நலம் நன்றாக இருந்தால் நமக்கு எந்த நோய்களும் தீண்டாது.

இரத்த அழுத்தம் குறைய – மெக்னீஸியம் அதிகம் உள்ள உணவுகள்:

மெக்னீஸியம் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் ரத்தக் குழாய்க்கு நன்மை அளிக்கும். எனவே பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், கோழிக்கறி, பயறு வகைகளிலும் மெக்னீஸியம் அதிக அளவில் உள்ளது.

யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!

இரத்த அழுத்தம் குறைய – சோடியம் அளவை குறைத்து கொள்ளவும்:

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொவத்தை தவிர்க்க வேண்டும். காரணம், அந்த உணவுகளில் சோடியம் தனிமம் அதிக அளவில் இருப்பதால், அவை ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும்.

இவை இதய நோய் மற்றும் வலிப்பு நோய்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே அதிக சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்து கொள்ளவும்.

ரத்த அழுத்தம் குறைய – கால்சியம் குறைபாடு:

கால்சியம் குறைபாடு இருந்தால் இரத்த அழுத்தம் நோய் ஏற்படும். எனவே உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளான பச்சை காய்கறிகள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகளவு சேர்த்து கொள்ளலாம்.

தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..!

 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> ஆரோக்கியமும் நல்வாழ்வும்