குடியை நிறுத்த சித்த வைத்தியம் | How to Stop Drinking Alcohol in Tamil
How to Stop Drinking Alcohol in Tamil:- இப்போதெல்லாம் குடிப்பழக்கம் நமது நாட்டின் ஒரு கலாச்சாரமாக மாறிவருகிறது. ஆம் கல்யாணம், கெடாவெட்டு, கோவில் திருவிழாக்கள் என விசேஷங்களில் பெரும்பாலும் ஆண்கள் மது அருந்துகிறார்கள். ஏன் மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும் மது அருந்துகிறார்கள். இந்த குடிப்பழக்கமானது வேடிக்கை விளையாட்டாக தொடங்கி, மதுபோதை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அதற்கு அடிமையாக்குகிறது. போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாக்கி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி நேரில் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இத்தகைய மது பிரியர்களை திருத்துவது எப்படி என்று பலரும் யோசிப்போம். சரி இந்த பதிவில் தங்களுக்கு உதவும் வகையில் குடியை நிறுத்த சித்த வைத்தியம் சிலவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் |
மது பழக்கத்தை நிறுத்துவதற்கு என்ன செய்வது | How to Avoid Drinking Alcohol in Tamil
குடியை நிறுத்த வில்வ இலை:-
வில்வ இலை குடி பழக்கம் – போதை மன்னர்களை திருத்த வில்வ இலை ஒரு அற்புத மருந்தாக பயன்படுகிறது. சரி வில்வ இலையை பயன்படுத்தி இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கஷாயத்தை மதுக்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு சீக்கிரம் நிறுத்திவிடலாம். சரி கஷாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று பார்க்கலாம் வாங்க.
தேவைப்படும் பொருட்கள்:-
- வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு
- ஏலக்காய் – ஒன்று
- கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
- பனை வெல்லம் – தேவையான அளவு
- தண்ணீர் – 200 மில்லி
குடியை நிறுத்த சித்த வைத்தியம் – பானம் செய்முறை:-
How to Stop Drinking Alcohol in Tamil: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளுங்கள். இடித்த இந்த பொடியையும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
இந்த கஷாயம் நன்றாக கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறு இந்த கஷாயத்தை தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம்.
குடியை நிறுத்த வில்வ இலை பொடி:-
How to Stop Drinking Alcohol in Tamil:- வில்வ இலை பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்து என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட பயன்படுகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் குடியை நிறுத்த வில்வ இலை ஒரு அற்புத மருந்து என்று சொல்லலாம்.
இந்த வில்வ இலையை சுத்தம் செய்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை 300 மில்லி நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த பானத்தை கொடுப்பதினால் மது பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள். குடிமன்னர்கள் இதையும் மீறி மது அருந்தினால் அவர்கள் அருந்திய மது பானம் வாந்தியாக வெளியேறிவிடும். ஆகவே திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |