கண் துடிப்பு காரணம் என்ன..? அதை எப்படி சரி செய்வது..?

கண் துடிப்பு நிற்க

கண் துடிப்பு காரணம் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் (How to stop eye twitching):

kan thudippu tips in tamil: சிலருக்கு அடிக்கடி கண்கள் துடித்து கொண்டே இருக்கும். இந்த கண் துடிப்பு பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

கண் துடிப்பு காரணம்: 1

மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை போன்றவை கண் துடிப்புக்கு காரணம் ஆகும்.

கண் துடிப்பு காரணம்: 2

மது அருந்துதல், பிரகாசமான விளக்கு வெளிச்சம், கண் பரப்பு மற்றும் இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், காற்று, தலை சுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்குக் காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும்.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

கண் துடிப்பு காரணம்: 3

பெரும்பாலும் வலி இல்லாமலே தான் இமை துடிக்கும்.

கண் துடிப்பு காரணம்: 4

இது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் சிகிச்சை ஏதும் தேவையில்லாமல் தானாகவே இது நின்று விடும்.

இமையில் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் துடிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

சரி இந்த கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகள்:

இமை துடிப்பு நிற்க – காஃபைன்:

தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.

ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.

கண் துடிப்பு நிற்க – மதுபானங்கள்:

தங்களுக்கு கண்கள் துடிப்பதற்கு மதுபானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே கண் துடிப்பு நிற்க மது அருந்துவதை தவிர்த்து கொள்ளவும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

இமை துடிப்பு நிற்க – ஆழ்ந்த உறக்கம்: 

சரியான தூக்கம் இல்லையென்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே இருக்கும். எனவே ஒருவருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம், நல்ல ஆழ்ந்து உறங்குங்கள்.

குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கண் துடிப்பு நிற்க – நீர்ச்சத்து குறைபாடு:

உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து குறைபாட்டினால், இந்த கண் துடித்து கொண்டே இருக்கும்.

எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். இவ்வாறு செய்வதினால் இந்த கண் துடிப்பதை தடுத்துவிடலாம்.

கண் துடிப்பு நிற்க  – ஊட்டச்சத்து:

மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்கின்றர்.

இதில் இன்னும் முடிவு எட்டப்பட வேண்டுமென்றாலும், சமச்சீர் உணவை உண்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

கண் துடிப்பு நிற்க  – ஹைட்ரோதெரப்பி:

கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம்.

ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும், வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கண் துடிப்பு நிற்க – பயிற்சிகள்

எளிமையான சில பயிற்சிகள் மற்றும் மசாஜ் செய்வதன் மூலம் கண்களுக்கு ஓய்வும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இமையில் இழுப்பு ஏற்படுவது இதன் மூலம் குறையும்.

கண் துடிப்பு நிற்க  – மசாஜ்:

கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம்.

இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்