உங்களின் உடல் எடையை 30 நாட்களில் குறைக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Weight Loss Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறை மற்றும் அதிக நேரம் அமர்ந்தபடி வேலை செய்வது அல்லது டிவி மற்றும் போன் பார்ப்பது போன்ற காரணத்தினால் உடல் எடை அதிகரிக்கின்றது. ஆனால் அதிகப்படியான உடல் எடை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கினை விளைவிக்க  கூடும். அதனால் இன்றைய பதிவில் 30 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

How to Lose Weight Fast in 30 Days in Tamil:

How to Lose Weight Fast in 30 Days in Tamil

உடல் எடை அதிகரிப்பது என்பது நமது உடலின் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக் கூடியது. எனவே அதனை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். அதனால் உடல் எடையை குறைக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம்.

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. இஞ்சி – 2 சிறிய துண்டு 
  2. எலுமிச்சை பழம் – 1
  3. பட்டை – 1 
  4. சீரகம் – 1 டீஸ்பூன் 
  5. பனங்கற்கண்டு- 1 டீஸ்பூன் 
  6. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 பட்டை , 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனை வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து சிறிய சிறிய உடற் பயிற்சி செய்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை 30 நாட்களில் குறைவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்த டிப்ஸ் மட்டும் போதும் 10 நாட்களில் உடல் எடை குறையும்

How to Lose Weight Fast Naturally and Permanently in Tamil:

How to Lose Weight Fast Naturally and Permanently in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமம் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  3. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஓமம், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு அதனை வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி தினமும் தொடர்ந்து  குடித்து சிறிய சிறிய உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை 30 நாட்களில் குறைவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துபாருங்கள்=> உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil