வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இளநீர் யார் குடிக்க கூடாது

Updated On: April 16, 2024 7:50 PM
Follow Us:
Ilaneer yar kudikka koodathu
---Advertisement---
Advertisement

இளநீர் யார் குடிக்க கூடாது

இந்த வெயிலில் எதாவது கூலிங் ஆக குடித்தால் நல்லா இருக்குமே என்று நினைப்போம். அப்படி நினைக்கும் போது முதல் முக்கியத்துவம் இளநீருக்கு தான். இந்த இளநீரை வெயில் காலங்களில் மட்டுமில்லை எல்லா சீசனிலும் இளநீரை குடிக்கிறார்கள். சில உணவுகள் சில பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், அதனால் அந்த உணவுகளை எடுத்து கொள்ள மாட்டார்கள். அதனையும் மீறி எடுத்து  கொள்பவர்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்தும்.

அது போல தான் இந்த இளநீரும். சில பிரச்சனை உள்ளவர்கள் இந்த இளநீரை குடிக்க கூடாதாம். அதனால் தான் இந்த பதிவில் யாரெல்லாம் இளநீர் குடிக்கலாம். யாரெல்லாம் குடிக்க கூடாது போன்ற தகவலை அறிந்து கொள்வோம் வாங்க..

இளநீர் யார் குடிக்க கூடாது:

இளநீர் குடிப்பதால் சளி மற்றும் இருமலை ஏற்படுத்துகிறது. அதனால் உங்களுக்கு ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனை இருந்தால் இளநீரை குடிக்க கூடாது. ஏனென்றால் இது உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த இளநீரை குடிக்க கூடாது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த இளநீரை அருந்த கூடாது. ஏனென்றால் குழந்தைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது.

ஒரு நாளைக்கு ஒரு இளநீருக்கு மேல் குடிக்க கூடாது, ஒருவேளை நீங்கள் அதிகமாக குடித்தால் உங்கள் உடலின் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகரிக்கும்.

இளநீர் குடிக்க  நேரம்:

இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்ததாக இருக்கும். இப்படி குடிப்பதால் உடலில் உள்ள சோம்பேறி தனம் நீங்கி, உடலுக்கு புத்துணர்ச்சியை தர கூடியது.

சாப்பிட பிறகு அல்லது சாப்பிடுவதற்கு முன்பும் கூட  குடிக்கலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னோ அல்லது அதன் பிறகு இளநீரை குடிக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now