தொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க ..!
உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைக்க என்னவெல்லாம் செய்யணும் சொல்லுங்க..? அட இதுக்கு ஜிம்முக்கு போகணும், டயட் இருக்கணும், பிடிச்சத சாப்பிடவே கூடாது, பிடிக்காதத சாப்பிட்டுட்டே இருக்கணும்… மொத்தத்துல நாயா உழைக்கணும். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்காமல் மிக சுலபமாக எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்னு சொன்னா நம்புவீங்களா? ஆமாங்க, இது உண்மை தாங்க.
நெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டா தொப்பை மற்றும் உடல் எடையை ஒரே மாசத்துல குறைச்சிடலாம்!
குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் |
சரி வாங்க நெல்லிக்காயை வைத்து உடல் எடை மற்றும் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.
தொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..!
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – அமிர்த பழம்
1000 கணக்கில் மருத்துவ குணம் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளது. நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் மிக முக்கியமானது உடல் எடை குறைய மற்றும் தொப்பை பிரச்சனை தான்.
இவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி முரப்பா
இஞ்சி முரப்பாவை போன்றது தான் நெல்லிக்காய் முரப்பாவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா.
இதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.
படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..! |
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி டீ
ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும்.
இதனை தயாரிக்க தேவையானவை…
- நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
- வெல்லம் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.
இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி மிட்டாய்
நெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடல் எடையை குறைக்க நெல்லி மிட்டாய் சிறந்த தேர்வு.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி பொடி
நெல்லிக்காயை அறிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..! |
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி சட்னி
நெல்லிக்காய் சட்னியா? மிகவும் புதுமையாக இருக்கா? நெல்லிக்காய் சட்னியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.
இதை தயார் செய்ய தேவையானவை…
- பூண்டு 2 பற்கள்
- கொத்தமல்லி விதைகள் 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 1
- கருவேப்பில்லை சிறிது
- எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, பரிமாறலாம்.
உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லிச்சாறு
நெல்லியை தினமும் 1 சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு கட்டி விடலாம். அல்லது இதனை சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடும்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |