இந்தியன் டாய்லெட் VS வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டில் எது சிறந்தது

Advertisement

Indian Toilet vs Western Toilet in Tamil

மனிதர்களுக்கு காலை கடனை முடிப்பது முக்கியமான ஒன்றாகும். இதற்காக ஆற்றங்கரை செல்லும் நிலை மாரி எல்லாரும் வீட்டிலும் கழிவறை வசதி வந்து விட்டது. அதிலும் பெரும்பாலானோர் வெஸ்டர்ன் டாய்லட்டையே விரும்புகின்றனர். ஆனால் அதிலும் ஹோட்டல், ரயில்கள், மால், சினிமா தியேட்டர் போன்றவற்றில் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. இருந்தாலும் சில நபர்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துகின்றனர். இந்த பதிவில் இந்தியன் டாய்லெட் சிறந்ததா.! வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததா என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Indian Toilet vs Western Toilet:

Indian Toilet vs Western Toilet in Tamil

இந்தியன் டாய்லெட் நன்மைகள்:

இந்தியன் கழிப்பறையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் போது தொடைகள் அடிவயிற்றின் மேல் வளைந்திருக்கும், இதனால் அடிவயிற்றில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மலம் ஈசியாக வெளியேறும்.

மேலும் சிறுநீர் பாதை தொற்று அல்லது ஏற்படுவதற்கான குறைவு. மேலும் சிறந்த உடற்பயிற்சியை தருகிறது.

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்களுக்கு தீர்வு

கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியன் டாய்லெட் நல்லது. ஏனென்றால் கருப்பையில் அழுத்தம் ஏற்படுவதில்லை. இதனால் சுகப்பிரசவம் ஏற்பட வழி வகுக்கிறது. 

இந்திய கழிப்பறைகளில் கால்களை மடித்து உட்காருவதால் பெருங்குடலில் உள்ள மலம் முழுவதும். வெளியேறுவதற்கு உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், பெருங்குடல் அழற்சி, குடல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுவதை தடுக்கிறது. பெருங்குடல் மற்றும் இதர நோய்கள் நோய்கள் வராமல் தடுப்பதற்கு இந்திய முறைப்படி இருக்கின்ற கழிப்பறையே சிறந்தது.

தீமைகள்:

வயதானவர்கள் மற்றும் கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றவர்களுக்கு இந்தியன் டாய்லெட் வசதியாக இருக்காது.

வெஸ்டர்ன் டாய்லெட் நன்மைகள்:

வெஸ்ட்டர்ன் டாய்லெட் வசதியானதாக கருதப்படுகிறது. வயதானவர்களுக்கும், கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் இந்த டாய்லெட் வசதியானதாக கருதப்படுகிறது.

தீமைகள்:

வெஸ்டர்ன் டாய்லெட்டில் நமது தோல்கள் நேரடியாக தொடர்பு உள்ளது, இதனால் தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.

மலம் கழிக்க ஈசியாக இருக்காது. நீண்ட நேரம் முயற்சிக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டள்ளது வைத்து பார்த்தால் வெஸ்டர்ன் டாய்லட்டை விட இந்தியன் டாய்லெட் தான் சிறந்தது என்று தெரிகிறது. 

சிறுநீர் தொற்று அனைத்தையும் சரி செய்வதற்கு இந்த பொடி மட்டும் போதும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement