உங்களுக்கு இன்சோம்னியா நோய் பற்றி தெரியமா..?

Advertisement

இன்சோம்னியாவிற்கு காரணம் என்ன ? அதில் இருந்து எப்படி விடுபடுவது?

இன்றைய இளைய சமுதாயத்தினர் இரவில் வேலை,பகலில் தூக்கம் என்ற சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வேலை நேரமும் மாறிவரும் கலாச்சாரமும் தான். பெரும்பாலானவர்கள் இரவு நேர கொண்டாட்டத்தையே விரும்புகின்றார்கள், அதனால் பலருக்கு தூக்கமின்மை பிரச்சனை வருகிறது. இது எல்லாம் ஒரு பிரச்சனையா என்று நினைக்கும் பலருக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன். இரவில் ஒழுங்கான தூக்கம் இல்லை என்றால் உங்களின் நாள் மிகவும் மோசமானதாக அமைய வாய்ப்பு உள்ளது.

இப்படி உங்கள் அன்றாட செயல்களுக்கு தூக்கம் மிக அவசியம் ஆனால் பலர் இரவில் ஆந்தை போல் விழித்துக்கொண்டு உள்ளனர். இரவில் நிம்மதியான தூக்கமின்மையால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக பாதிப்புக்கு உள்ளகாக வேண்டிய அபாயம் உள்ளது. தூக்கமின்மை எதனால் ஏற்படுகிறது. அதனால் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்ன.? தூக்கமின்மையில் இருந்து எப்படி விடுபடலாம் என்பது பற்றி முழுவதுமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மனஅழுத்தம் நீங்கி தூக்கம் நன்றாக வர இதை செய்யுங்க..!

Insomnia Symptoms:

Insomnia என்பது உடலுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லாமல் இருக்கும் நோயின் அறிகுறி. இந்தியாவில் 30% மக்கள் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. நாம் உடல் வளர்ச்சிக்கு தூக்கம் மிக முக்கியம். உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் இரவில் தான் உற்பத்தியாகும். இரவில் சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பங்கு நேரத்தை  தூக்கத்திற்கு ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தது 7 மணி நேரங்களாவது தூக்கத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தூக்கமின்மைக்கு பொதுவான காரணங்கள் தூங்குவதில் ஏற்படும் கால தாமதம், மற்றும் ஒழுங்கற்ற நேரத்தில் தினமும் தூங்குவது. மன அழுத்தம், கவலை மற்றும் நீங்கள் சாப்பிடும் மருந்துகள் போன்றவை உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம். 

யாருக்கலாம் தூக்கமின்மை பிரச்சனை வரும்  ..?

stress

பொதுவாக 30 முதல் 40 வயதை கொண்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் மனஉளைச்சல், மன சோர்வு, செரிமான பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் தலைவலி போன்ற காரணங்களால் இருக்கலாம். 

high food at night time

உடலுக்கு சரியான வேலை கொடுக்காமல் இருப்பதாலும், அதிக நேரம் டிவி, மொபைல், கணினி பயன்படுத்துவதாலும் மூளை சோர்வடையாமல் இருக்கும். அப்பொழுது தூக்கம் வருவது கடினம். இரவில் அதிக அளவில் சாப்பிடும் போது சிலருக்கு  தூங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நன்றாக தூங்குவது அவசியம், ஆனால் பலர் மணிக்கணக்கில் கூரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை இரவு நேரங்களின் வேலையாக வைத்துள்ளனர்.

நன்றாக தூங்குவது ஏன் முக்கியம்?

நமது உடல், நாள் முழுவதும் சரியாக  சுறுசுறுப்பாக இயங்குவதற்கு நிம்மதியான தூக்கம் அவசியம்.

நமது நரம்பு மண்டலத்தைப் பொறுத்தவரை, அது நினைவாற்றலுக்கு உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் அதனை பராமரிக்கவும் நமது மூளைக்கு போதுமான தூக்கம் அவசியம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தூக்கத்தையே நம்பியிருக்கிறது இருதயம்.

நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் மூளைக்கு தூக்கம் தேவைப்படுகிறது.

தூக்கமின்மையின் அறிகுறிகள் என்ன?

car drive

insomnia இருந்தால், பகலில் மயக்கம் மற்றும் உடல் சோர்வு, உங்கள் உடலுக்கு சரியான உறக்கமில்லை என்பதை எடுத்து காட்டுகிறது. பகல்நேர தூக்கம் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், நீங்கள் வாகனம் ஓட்டும் போதோ அல்லது உங்கள் பணி நேரத்திலோ உறங்கினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகம். உங்களின் முக்கியமான வேலைகளின் போது நீங்கள் தூங்கும் அபாயம் உள்ளது.

ஆழ்ந்த தூக்கம் வர முத்திரை

தூக்கமின்மையால் நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.

தூக்கமின்மையால் கவனத்தை ஒரு செயலின் மீது செலுத்தும் திறன் குறையும். மற்றும் புதிய தகவல்களைப் புரிந்துகொள்வது, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் படிப்பது ஆகியவற்றில் வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும். 

முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும்.

நீங்கள் செய்யும் செயலின் முடிவு குறித்து குழப்பங்கள் ஏற்படும். 

எந்த ஒரு செயலிலும் எரிச்சல், மோசமான மனநிலை மற்றும் பதட்டம் உள்ளடங்கி இருக்கும்.

பசி உணர்வு இருந்துக்கொண்டே இருக்கும்.

இரவு தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க

இப்போது சிறந்த தூக்கத்திற்கான சில குறிப்புகள் உங்களுக்காக…

  1. இரவில் நன்றாக தூங்குவதற்கு பகலில் நிறைய சூரிய ஒளியை எதிர்கொள்வது ஒரு சிறந்த யோசனை!
  2. நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் விழித்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அதனை போல் உங்களது தினசரி செயல்பாடுகளை எப்போதும் ஒரே நேரத்தில் செயல்படுத்துங்கள், இதனால் உங்கள் உடல் செயல்பாடு மற்றும் தூக்கம் என பிரித்து, உடலுக்கு ஆற்றலைச் செலவழிக்க வேண்டிய நேரம் மற்றும் எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை அறிய உங்கள் மூளைக்கு உதவுகிறது. அதனால், சரியான நேரத்தில் தூங்குவது முக்கியம்.

  1. அமைதியான சூழலை உருவாக்குங்கள்

நீங்கள் தூங்கும் அறையின் விளக்கு ஒளி அல்லது வெளிப்புற  விளக்கு ஒளி உங்களது தூக்கத்தை கெடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் காலை வெளிச்சம் உங்கள் மனதிற்கும் உடலிற்கும் சிறந்தது, காலை வெளிச்சம் உங்கள் மீது படும் விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  1. ஊட்டச்சத்து நிறைந்த உணவு, உடற்பயிற்சி ஆகியவை உங்களுக்கு ஒரு நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement