Is Eating Chicken Feet Good or Bad in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கோழி பாதங்களை சாப்பிடலாமா.? சாப்பிடக்கூடாதா.? இதனை சாப்பிட்டால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா.? உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். இவ்வுலகில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்கள் தான் அதிகம். அசைவ உணவுகளில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அசைவ உணவுகள் பிடிக்கும். அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு மட்டன் அல்லது சிக்கன் இதுதான் பிடிக்கும். மட்டனில் பல விதம் உள்ளது. அதாவது, ஆட்டு நெஞ்செலும்பு, ஆட்டுக்கால் சூப்பு, ஆட்டு ஈரல், ஆட்டு குடல், சுவரொட்டி, ஆட்டு இரத்தம் என பல வகைகள் உள்ளது. இவை அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால், கோழி கறியை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் அனைவரும் அதன் கறியை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து அதன் எலும்புகளில் சூப்பு வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், கோழி கால்களையும் சிலர் சமைத்து சாப்பிடுவார்கள். இது அனைவர்க்கும் புதிதாக இருக்கும். கோழி பாதங்களை சமைத்து சாப்பிட்டு பார்த்து இருக்க மாட்டோம். ஆனால், கோழி பாதங்களை சமைத்து சாப்பிடலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.? சிலர் இதனை சாப்பிட கூடாது என்று கூறுகிறார்கள். அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கோழி பாதங்களை சாப்பிடுவது நல்லதா.?
- கோழி கறி வாங்கும்போது, இறைச்சி கடைகளில் அதனை வெட்டும்போது தேவையில்லாத பாகங்களை ஒதுக்கி விடுவார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த கோழி பாதங்கள். ஆனால், சிலர் இந்த கோழி பாதங்களை வாங்கி வந்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.
- இப்படி கோழி பாதங்களை சமைத்து சாப்பிடலாமா.? என்று கேட்டால்.. நிச்சயம் சாப்பிடலாம். ஆனால், அதனை சமைக்கும் முறை என்பது மிகவும் முக்கியம். அதனை எப்படி சமைக்க வேண்டும் என்பதை இறுதியாக பார்க்கலாம்.
- கோழி பாதங்களில் கொலாஜென் இருக்கிறது. இதனை நாம் சமைத்து சாப்பிடும்போது அதிலிருந்து நமக்கு கொலாஜென் கிடைக்கிறது.
- இந்த கொலாஜென் ஆனது நமது தலைமுடி, நகங்கள், சருமம் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முக்கியமாக, முடி வளர்ச்சிக்கும் சரும பாதுகாப்பிற்கும் இது அவசியமான ஒன்று.
- அதுமட்டுமில்லாமல், கோழி பாதங்களில் அதிக அளவில் கால்சியமும் பாஸ்பரஸும் உள்ளது. இதனை நாம் சமைத்து சாப்பிடும்போது நம் உடலில் உள்ள எலும்புகள் நன்றாக வலிமை பெரும். எனவே, கோழி பாதங்களை சமைத்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால், அதனை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகவும் அடிக்கடி வாங்கியும் சமைத்து சாப்பிடக் கூடாது.
எப்படி சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.?
- கடையில் கோழி பாதங்களை வாங்கும்போது நன்றாக பார்த்து வாங்க வேண்டும். கோலி கால்கள் எந்தவித சேதமும் இல்லாமல் பிரஷாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அதற்கு மாறாக கோழி பாதங்கள் கருப்பு நிற திட்டுடனும், சேதமடைந்தும், துர்நாற்றம் வீசும் வகையில் இருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- கோழி பாதங்கள் நம் உடலிற்கு நல்லது என்றாலும், அதில் சில பாக்டீரியாக்கள் இருக்கும். அதனால் அதனை முறைப்படி சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.
- கோழி பாதங்களை சமைக்கும் முன்பாக, அதன் மேல் இருக்கும் தோலினையம் நகங்களை நீக்கி விட வேண்டும். கோழி பாதங்களை வாங்கி வந்ததும், தோலினையும் நகங்களை நீக்கி விட்டு ஒன்றிக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து , இதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேய்த்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.
- பிறகு, தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு, கோழி பாதங்களில் மஞ்சள் தடவி கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து அதன் பிறகு தான் சமைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு சமைத்தால் தான் கோழி பாதங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |