அடிக்கடி கை, கால் விரல்களில் நெட்டை எடுப்பவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

Is It Bad To Crack Your Fingers Every Day

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைத்து விடும்.

நாம் அனைவருமே தினமும் செய்யும் பொதுவான விஷயங்களில் இதுவும் ஓன்று. அது வேறவொன்றும் இல்லை நெட்டை எடுப்பதை தான் கூறுகிறோம். நாம் விரல்களில் நெட்டை எடுப்பதை சாதாரண விஷயமாக நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதனால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது என்ன என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை..!

விரல்களில் நெட்டி எதனால் வருகிறது..? 

Is It Bad To Crack Your Fingers Every Day

கை மற்றும் கால் விரல்களில் வலி இருந்தால் நெட்டி எடுப்பார்கள். சில சமயம் நம்மை அறியாமலும் நெட்டி எடுப்போம். அப்படி எடுக்கும் போது அந்த சத்தம் எப்படி வருகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?

 நம் விரல்கள் இரண்டு எலும்புகள் ஒரே எலும்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. அப்படி நாம் நம் விரல்களை நெட்டி எடுக்கும்போது அந்த 2 எலும்புகளும் இணைக்கப்பட்டிருக்கும் இடையில் உராய்வு ஏற்படும். அதாவது 2 எலும்புகளும் உரசி கொள்ளும் போது அதில் இருந்து சத்தம் வரும். அந்த சத்தத்தை தான் நாம் நெட்டை என்று சொல்கிறோம்.  

அதுபோல நாம் நெட்டை எடுக்கும் போது எலும்புகளுக்கு இடையில் ஒரு நீர்மம் உருவாகும். அதை சினோவியல் நீர்மம் (Synovial Fluid) அதாவது மூட்டுறை திரவம் என்று சொல்லப்படுகிறது.

இந்த மூட்டுறை திரவத்தில் கரைந்திருக்கும் வாயுக்களில் நுண்ணிய குமிழிகள் உருவாகும். இந்த நுண்ணிய குமிழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய குமிழிகள் உருவாகும். இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வெளியிலிருந்து கூடுதல் மூட்டுறை திரவம் விரைந்து வரும்.

அப்படி வரும் திரவம், இடத்தை நிரப்பும் முன்னர் உருவான குமிழிகள் அனைத்தையும் உடைத்து விடுகின்றது. அப்படி உடையும் போது ஏற்படும் அந்தச் சத்தம் தான் உங்களுக்கு விரல்களில் நெட்டை எடுக்கும் பொழுது கேட்கிறது.

உங்கள் விரல் நகம் சொல்லும் நோய் அறிகுறிகள் என்ன..?

விரல்களில் நெட்டி எடுப்பதால் ஏற்படும் விளைவுகள்: 

உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது. அடிக்கடி நெட்டை முறிப்பதால் இணைப்புகளை சுற்றி இருக்கும் மெல்லிய சதைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் அடிக்கடி விரல்களில் நெட்டை முறிப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

கை விரல்களில் அடிக்கடி நெட்டை எடுப்பதால் கையின் வலிமையை பாதிக்கிறது. மேலும் இதனால் நாளடைவில் கை விரல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அதனால் இனி எப்பொழுதும் நெட்டை எடுக்கும்போது இந்த விஷயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்