உடல் ஆரோக்கியத்திற்கு வெல்லம் நல்லதா..? சர்க்கரை நல்லதா..?

Advertisement

Vellam Vs Sarkarai

நண்பர்களுக்கு வணக்கம்..! நம் அன்றாட வாழ்வில் நாம் தினசரி பயன்படுத்தும் உணவு பொருள் என்றால் அது சர்க்கரை தான். நாம் சர்க்கரையை தினமும் பயன்படுத்தி வருகிறோம். சில மக்கள் சர்க்கரையை பயன்படுத்துவார்கள். அதுபோல சிலர் வெல்லத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இது இரண்டிலும் இனிப்பு சுவை ஓன்று போல தான் இருக்கிறது. இருந்தாலும் ஏன் மக்கள் இதை பிரித்து சாப்பிடுகிறார்கள். அதுபோல வெல்லதிற்கும் சர்க்கரைக்கும் என்ன வேறுபாடு என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

நாட்டு சர்க்கரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

வெல்லம் நல்லதா..? சர்க்கரை நல்லதா..?

வெல்லம் நல்லதா..? சர்க்கரை நல்லதா

வெல்லம் மற்றும் சர்க்கரை இரண்டுமே கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் சர்க்கரையை விட வெல்லம் தான் ஆரோக்கியமானது என்று பலரும் கூறுகின்றன.

காரணம், வெல்லம் கரும்பில் இருந்து நேரடியாக தயாரிக்க கூடிய ஒரு உணவு பொருள். அதனால் வெல்லத்தில் எந்த ஒரு ரசாயன பொருள்களும் சேர்க்கப்பட வில்லை. ஆனால் சர்க்கரை அப்படி கிடையாது. 

சர்க்கரை கரும்பில் இருந்து எடுக்கப்பட்டாலும் அது பதப்படுத்தப்பட்டு, அதில் வெண்மை நிறம் கொண்டு வருவதற்காக அதில் பல இரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. 

அதனால் தான் மருத்துவர்கள் சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 உடலுக்கு பலமடங்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி பயன்கள்..!

வெல்லம் மற்றும் சர்க்கரை வேறுபாடு என்ன..?  

வெல்லம் சர்க்கரை
இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருக்கின்றன. இதில் 99.9% சுக்ரோஸ்
50% குளுக்கோஸ்
50% பிரக்டோஸ் காணப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச புரதம் மற்றும் கொழுப்பு  காணப்படுகிறது சர்க்கரையில் புரதம் மற்றும்  கொழுப்பு இல்லை.
இதில் 8.5 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. 4g கார்போஹைட்ரேட் இருக்கிறது.
இதில் 36 KCAL இருக்கிறது இதில் 16 KCAL இருக்கிறது
ஒரு கிராம் வெல்லத்தில் 383 கி.கலோரிகள் காணப்படுகின்றன. ஒரு கிராம் சர்க்கரையில் 400 கி.கலோரிகள் இருக்கிறது.
இதில் இரசாயன பொருட்கள் சேர்க்கப்படவில்லை இதில் இரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement