ஜவ்வரிசி மருத்துவ பயன்கள் | Javvarisi Health Benefits in Tamil
அரிசியில் பல வகையான அரிசி வகைகள் உள்ளன. ஒவ்வொரு அரிசி வகைகளிலுமே எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். நாம் இந்த பதிவில் ஜவ்வரிசியின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இந்த ஜவ்வரிசியானது மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கிறது. பாயாசம் மற்றும் அனைத்து சுப காரியங்களில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த ஜவ்வரிசி. ஜவ்வரிசியை ஜவ்வரிசி சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்று பல பெயராலும் அழைத்து வருகிறார்கள். ஜவ்வரிசியால் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
வரகு அரிசி மருத்துவ பயன்கள் |
அல்சர் நோய் குணமாக:
நாம் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வயிற்றில் புண்கள் ஏற்பட்டு அல்சர் நோயில் விட்டுவிடுகிறது. குறிப்பாக காலையில் உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்கள், அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு அல்சர் நோயானது எளிதில் தாக்கிவிடுகிறது. அல்சர் நோய் குணமாக ஜவ்வரிசியால் சமைக்கப்பட்ட உணவினை சாப்பிட்டு வருவதால் அல்சர் புண் மிக விரைவில் ஆறிவிடுகிறது.
இரத்த சோகை குணமாக:
உடலில் இரத்தம் கம்மியாக இருக்கும் காரணத்தால் இரத்த சோகை பிரச்சனை ஏற்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை இருந்தால் பல மணிநேரம் தொடர்ந்து வேலை பார்ப்பதற்கு சிரமம் ஏற்படும். இரத்த சோகை பிரச்சனையானது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிவப்பு அரிசி பயன்கள் |
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இன்று பலருக்கும் உடலில் எளிதில் நோய் தாக்க கூடியதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். ஜவ்வரிசியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் A, C அதிகமாக நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. நமது உடலானது எப்போதும் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதற்கு ஜவ்வரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான தொற்று நோய்களும் நம்மை அண்டாது.
கவுனி அரிசி மருத்துவ பயன்கள் |
உடல் எடை அதிகரிக்க:
ஒரு சிலர் மிகவும் மெலிந்து போய் காட்சியளிப்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடல் எடையானது அதிகரிக்கவே அதிகரிக்காது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் பல தரப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு ஜவ்வரிசி உணவுகளை சாப்பிட்டு பாருங்கள். நாளடைவில் உங்களின் உடல் எடை எடை அதிகரித்து உடல் ஆரோக்கியாக இருக்கும். இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஜவ்வரிசி சரியான உணவு.
இதய ஆரோக்கியத்திற்கு:
நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதியாக இருப்பது இதயம்தான். இதயமானது சீராக இயங்க, நாம் பல நாட்கள் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஜவ்வரிசியில் அதிகமாக புரதச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேராமல் இருக்க ஜவ்வரிசி உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதனால் இதய துடிப்பு சீராகவும், இதயம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
வயிற்று புண் குணமாக:
ஜவ்வரிசி மருத்துவ குணங்கள்: காலையில் உணவு சாப்பிடாமல் இருப்பவர்கள், அதிகமாக சிகரெட் புகைப்பவர்களுக்கு அல்சர் பிரச்சனை விரைவில் வந்துவிடுகிறது. வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது.
பற்கள் பலம் பெற:
ஜவ்வரிசி பயன்கள்: நமது உடல்நலத்தில் பற்களும் முக்கிய பங்கினை வகிக்கிறது. பற்கள் நல்ல வலுவாக இருந்தால் தான் நாம் எந்த உணவையும் சாப்பிட முடியும். ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் அதிக அளவில் சேர்ந்து அவை இரண்டையும் பலப்படுத்துகிறது. பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |