Kalarchikai Sapidum Murai | கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும்
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. நமக்கு பெரும்பாலான பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என்பது தெரியாது. அக்காலத்தில் எல்லாம் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொரு வியாதிக்கும் இந்த மருந்தினை இப்படி சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இக்காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மருந்தாக இருந்தாலும் சரி உணவாக இருந்தாலும் சரி அதனை எப்படி உட்கொள்வது என்பது தெரியாது. அவற்றில் கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும் என்றும் தெரியாது.
கழற்சிக்காய் பற்றி நாம் அனைவருமே கேள்வி பட்டிருப்போம். கழற்சிக்காய் பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது. ஆகையால் இப்பதிவில் கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும்.?
கழற்சிக்காய் பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும் நாட்டு மருந்து ஆகும். இதனை சரியான முறையில் உட்கொள்வதும் மூலம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் கர்ப்பப்பை தொற்று அழற்சிகள் ஆகியவற்றை சரி செய்யாலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
கர்ப்பப்பை ஆரோக்கியம் பெற:
கழற்சிக்காயை காய வைத்து, பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் கர்ப்பப்பையில் தோன்றும் அழற்சி தொற்றுகள், நோய்கள் போன்றவை நீங்கிவிடும்.
பெண்களை பாதுகாக்கும் கழற்சிக்காய்…!
வயிற்று பிரச்னைகள் நீங்க:
பெரும்பாலானவர்கள் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். அப்படி இருப்பவர்கள் கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. சிறிதளவு கழற்சிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
சரும நோய்கள் நீங்க:
கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ள வேண்டும். கொஞ்சம் ஆறியதும் அதனை பொடியாக அரைத்து தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சருமநோய்கள் நீங்கும்.
காய்ச்சல் நீங்க:
ஒரு கழற்சிக்காயை எடுத்து, அதனுடன் ஐந்து மிளகு சேர்த்து காலை மாலை என இருவேளையும் கொடுப்பதன் மூலம் வாதக்காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல், கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியவை குணமாகும்.
வீக்கம் மற்றும் புண்கள் ஆற:
கழற்சியை பொடியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து, அந்த பேஸ்டை புண்கள் மீது அப்ளை செய்து வர புண்கள் விரைவில் ஆறிவிடும்.
உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |