Kalarchikai Side Effects in Tamil
பொதுவாக நம் அனைவருக்குமே நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அதிகளவு அக்கறை இருக்கும். அதற்காகவே நம்மில் பலரும் சாப்பிடும் ஒவ்வொரு பொருட்களுமே அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிக சத்துக்கள் நிறைந்த பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படி சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ஓன்று தான் கழற்சிக்காய். கழற்சிக்காயில் எத்தனையோ சத்துக்கள் இருக்கின்றன. அப்படி கழற்சிக்காயில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
பெண்களை பாதுகாக்கும் கழற்சிக்காய்
அதேபோல், கழற்சிக்காயில் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது பற்றி நாம் தெரிந்துகொள்வதில்லை. கழற்சிக்காயில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
கழற்சிக்காய் தீமைகள் – Kalarchikai Theemaigal in Tamil:
பொதுவாக கழற்சிக்காய் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு உடல் நலக் கோளாறுகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கழற்சிக்காய் பல்வேறு மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மிக முக்கியமான மூலிகையாகும்.
ஆனால் என்ன தான் கழற்சிக்காயில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதில் யாருக்கும் தெரியாத தீமைகளும் இருக்கின்றன. அப்படி கழற்சிக்காயில் இருக்கும் தீமைகள் பற்றி இப்போது காணலாம் வாங்க.
நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது:
ஒருவர் கழற்சிக்காயை அதிக அளவு உண்பதால், அது நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே கழற்சிக்காயை சாப்பிடும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிகமாக சாப்பிட கூடாது:
கழற்சிக்காய் ஒரு மூலிகை வகை என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொள்ள கூடாது. மீறி அதிக அளவு பயன்படுத்தினால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரலாம்.
கழற்சிக்காய் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா
கழற்சிக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது..?
- பொதுவாக கழற்சிக்காயில் என்னதான் அதிகளவு பெண்களுக்கு சத்துக்கள் இருந்தாலும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கழற்சிக்காயை மருத்துவரின் அனுமதி இல்லாமல் சாப்பிட கூடாது.
- அதுபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் கழற்சிக்காயை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதிலும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் கழற்சிக்காய் சாப்பிட வேண்டாம்.
- கழற்சிக்காய் பாதுகாப்பான மூலிகையாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
கழற்சிக்காய் பொடி சாப்பிடும் அளவு:
ஒருவர் கழற்சிக்காய் பொடியை பரிந்துரைக்கப்படும் அளவான 1/4 டீஸ்பூன் அளவில் உட்கொள்ள வேண்டும். இந்த சரியான அளவுக்காக ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது சிறந்தது. இந்த அளவை மீறி சாப்பிட்டால் உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |