வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கல்யாண முருங்கை இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

Updated On: September 18, 2025 4:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள் 

இன்றைய பதிவில் கல்யாண முருங்கை நன்மைகள் பற்றி பார்க்கப் போகிறோம். கல்யாண முருங்கை அதிக நன்மைகளை கொண்டுள்ளது. இது  செடி அதிக மருத்துவ தன்மையை கொண்டுள்ளது. இந்த வகை செடிகளை அதிகம் யாரும் வளர்க்க மாட்டார்கள். இது கிராமப்புரங்கள், வயல்வெளிகள் மற்றும் வேளி ஓரங்களில் தானாக வளரும் தன்மையை கொண்டுள்ளது. இதன் பூ, இலை ,பட்டை இவை அனைத்தும் மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த செடிக்கு முள் முருங்கை என மற்றோரு பெயரும் உண்டு. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இந்த இலை மிக சிறந்த கிருமி நாசினியாக கருதப்படுகிறது. இதிலிருக்கும் நார்சத்து ,புரதச்சத்து மற்றும் கால்சியம், இரும்புசத்து ஃபோலேட்  போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது சிறுநீரக பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது நாம் கல்யாண முருங்கை மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

சிறுநீர் கோளாறு:

கல்யாண முருங்கை சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல் மற்றும் அதிக மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கல்யாண முருங்கையுடன் பாசி பயிறு சேர்த்து  நெய் சேர்த்து  தாளித்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனையை சரிசெய்யும்.

பால் சுரக்க:

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு கல்யாண முருங்கை  இலை  நல்ல பலனை அளிக்கிறது.கல்யாண முருங்கையுடன் பாசி பயிறு சேர்த்து  நெய் சேர்த்து  தாளித்து சாப்பிட்டு வந்தால் பால் உற்பத்தி அதிகரிக்க செய்யும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை:

 ரொம்ப நாளாக மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் கல்யாண முருங்கை சாப்பிடுவதன் மூலம்  சிறந்த பலனை தருகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள் ஹார்மோன் பிரச்சனைகள், நீர்க்கட்டி , தைராய்டு மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் கல்யாண முருங்கை இலையின் சாறு எடுத்து  5 மில்லி குடித்து வந்தால் மாதவிடாய் சீராக இருக்கும்.

மூக்குத்தி பூவில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா..?

ஜீரண கோளாறு:

ஜீரண கோளாறு மற்றும் மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கல்யாண முருங்கை இலை மற்றும் சீரகம் , சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண கோளாறு  பிரச்சனையை சரிசெய்வதற்கு தீர்வாக உள்ளது.

சுவாச பிரச்சனை:

ஆஸ்துமா வீசிங், சளி , இருமல் மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகசிறந்த மருந்ததாக செயல்படுகிறது. இந்த இலையை எடுத்து அரிசி மாவுடன் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு தோசையாக சாப்பிட்டு வருவதன் மூலம்  சுவாச பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

உடல் எடையை குறைக்க:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த கல்யாண முருங்கை இலை சிறந்த தீர்வாக உள்ளது.இந்த இலையை அரைத்து வாரம் இரண்டு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

கருவுற்றல் :

குழைந்தை கருவுற்றலுக்கு இந்த இலை முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இலையின் சாறை தினமும் குடித்து வந்தால் பாக்கியம் கிடைக்குமாம். கல்யாண முருங்கை பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கருமுட்டை அதிகம் உற்பத்தியாகி குழந்தை பாக்கியத்தை உண்டாக்கும்.

சொரி ,சிரங்கு பிரச்சனை :

சொரி சிரங்கு மற்றும் படர்தாமரை பிரச்சனை இருப்பவர்களுக்கு கல்யாண முருங்கை இலை தீர்வாக உள்ளது. இந்த இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now