Kamala Orange Benefits In Tamil
பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு பழங்களை தருவது அவர்கள் பருவ வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு பழங்களும் அந்தந்த சீசன்க்கு தான் காய்க்கும். ஆனால் கமலா ஆரஞ்சு பழம் எல்லா சீசன்களிலும் காய்க்க கூடியவை. அதுமட்டுமல்லாமல் கமலா ஆரஞ்சு பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன.அது என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் சி :
கமலா ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனால் நம் உடலில் காணப்படும் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சுளைகளில் காணப்படும் நார்ச்சத்தானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையவை.
கண் பிரச்சனை :
கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உடையவர்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய இந்த கமலா ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிடலாம். இந்த பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்திற்கு ஈடானவை. இவை கண் பார்வைக்கு பெரிதும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி :
நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக பலரும் வைட்டமின் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளுகிறார்கள். இது சிலருக்கு பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுத்தலாம். மாறாக இயற்கையாக கிடைக்க கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த இந்த கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடல் வலி, உடல் சோர்வு நீங்குகிறது.
கருமை நிறம் மறைய :
கமலா ஆரஞ்சு பழத்தை முகத்தில் தடவி வர நாளடைவில் கருமை நிறம் மறைந்து தோல் வெள்ளையாக மாறிவிடும். கமலா ஆரஞ்சு பழத்தின் சாறு தடவ தோளில் காணப்படும் கருமை நிறைந்த படைகள் சரியாகுகின்றன. இதனால் முகம் பளப்பாகவும் மென்மையாவும் காணப்படும். கமலா ஆரஞ்சு பழ சாறுடன் தக்காளி மற்றும் பசு நெய் கலந்து முகத்தில் தடவ முகம் பிரகாசமாகவும் வெண்மையாகவும் காணப்படும்.
பேன், பொடுகு பிரச்சனை சரியாக :
கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு தோள்களை தூக்கி எரியாமல் காய வைத்து பொடியாக்கி சீயாக்காயுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கிவிடும். தலையில் உண்டாகும் சொறி அரிப்புகள் காணாமல் போகும்.
சிறுநீரக கோளாறு :
கமலா ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக கோளாறுகள் குணமாகுகின்றன. சிறுநீரகதில் கல் பிரச்சனை இருப்பவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதன் மூலம் நாளடைவில் சிறுநீரக கல் கரைகின்றன. மற்றும் சிறு நீரக அடைப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் சிறு நீரக அடைப்பு வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |