கம்பு தரும் அற்புத மருத்துவ பயன்கள் | Kambu Benefits in Tamil

Kambu Benefits in Tamil

கம்பு மருத்துவ குணங்கள்..!

Kambu Benefits in Tamil – இந்தியாவில் வளரும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. இந்தியாவில் வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியை தீர்த்த பொருளாக கம்பு விளங்கியது. மேலும் இந்தியாவில் பெருபாலும் அதிக இடங்களில் பயிரிடப்படும் தானிய வகைகள் ஆகும். அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். அவை போலவே பல சத்துக்கள் அடங்கிய மற்றும்  உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்களுள் ஒன்று தான் கம்பு. இந்த கம்பில் புட்டு, கஞ்சி, கூழ், களி, அடை, இட்லி, தோசை, முளைவிட்ட பயிர் என்று பலவகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து கம்பில் மட்டுமே உள்ளது. சரி இந்த பதிவில் கம்பு பயன்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

கம்பு பயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

கம்பில் அதிகளவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்று பார்த்தால் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நயாசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil

தோல் மற்றும் கண் பார்வை தெளிவு பெற கம்பு:

கம்பில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் உள்ள செல்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உகந்தது. மேலும் உடலில் ஏற்படும் தோல் சுருக்கத்தை முற்றிலும் தவிர்த்து உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். மேலும் தோலிற்கும், கண் பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A-வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின் அதிகளவு கம்பில் மட்டுமே இருக்கிறது.

செரிமான பிரச்சனை குணமாக:

செரிமான பிரச்சனை

கம்பில் நார்ச்சத்து அதிகளவு இருப்பதினால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வயிற்று புண், குடல் புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் என்று வயிறு சம்மந்தமாக பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் கம்பில் செய்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குணமாகும்.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தொடர்ந்து கம்பில் செய்யப்பட்ட உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளலாம். இதற்கு என காரணம் என்றால் கம்பில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்யும் இதனால் உடல் பருமனானது சரியான நிலையில் இருக்கும்.

முடி உதிர்வு நீங்க:

முடி உதிர்வு

இப்போது அனைத்து வயதினரும் சந்திக்கக்கூடிய ஒரே பிரச்சனையென்றால் அது முடி உதிர்வு பிரச்சனை தான். இந்த முடி உதிர்வு பிரச்சனை குறைய மற்றும் நன்கு முடி அடர்த்தியாக வளர நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று புரதம். இந்த புரதம் சத்தானது கம்பில் அதிகளவு நிறைந்துள்ளது. ஆகவே கம்பில் செய்த உணவுகளை உட்க்கொள்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கலாம் மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தாய்ப்பால் அதிகரிக்க:-

பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இருப்பினும் புதிதாக குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும் அல்லது நின்றுவிடும். ஆகவே தாய்மார்கள் தொடர்ந்து கம்பில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil