Kannupillai Plant Uses in Tamil | கண்ணுப்பிள்ளை செடியின் பயன்கள்
கண்ணுப்பிள்ளை செடி சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் தன்மையுடையது . கண்ணுப்பிள்ளை செடியின் ஆங்கில பெயர் ஏர்வ லனாட்டா. இந்த செடி கிராம பகுதியில் அதிகமாக கிடைக்கும். சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி, காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்ணுப்பிள்ளை செடி மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு இந்த செடியுடன் மா இலை , வேப்ப இலை போன்ற இலைகளுடன் சேர்த்து கட்டி மாலையாக போடப்படுகிறது. இது ஈரமான பகுதியில் வளரக்கூடிய செடி வகையை சேர்ந்தது. இந்த இலையில் உள்ள பூக்கள் அவல் போன்று வெண்மையான நிறத்தில் இருக்கும். இந்த செடியில் உள்ள பூ, தண்டு, இலை ஆகியவைகள் மருத்துவகுணம் உடையது.
மழைக்காலம் நெருங்கும்போது இந்த செடி இரண்டு அடி உயரத்தில் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகை வரும் சமையத்தில் இந்த செடியில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். அதில் உள்ள இலையை கண் என்றும் அதன் பூவை பிள்ளையாகவும் கற்பனை செய்து கண்ணுப்பிள்ளை செடி என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த இலை சிறுநீரக பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது.
நெருஞ்சில் செடியின் நன்மைகள்..!
கண்ணுப்பிள்ளை செடி நன்மைகள்:
- தற்காலத்தில் அதிகமாக பரவிவரும் சிறுநீரக சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- நம் உடம்பில் சிறுநீரகத்தில் வரும் கற்களை சிறுநீரக வழியாக கரைத்து அல்லது உடைத்து வெளியில் கொண்டுவர கண்ணுப்பிள்ளை செடி மருந்தாக பயன்படுகிறது.
- கண்ணுப்பிள்ளை செடியை அரைத்து சார் எடுத்து தினமும் வெறு வயிற்றில் எடுத்து கொள்வதன் மூலம் மாதாந்திர உதிர போக்கு பாதிப்புகள் மற்றும் நீர் சுருக்கு போன்ற தொந்தரவை சரி செய்யும்.
- கருவுற்ற பெண்கள் தங்கள் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி உடலுக்கு நல்ல ஆற்றலையும் வலிமையும் தருகிறது. கல்யாணம் ஆகாத பெண்கள் கூட உணவில் சேர்த்து எடுத்து கொள்வதன் மூலம் கரு தங்காமல் போகும் ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளலாம்.
- கண்ணுப்பிள்ளை செடி வேரை 2 லிட்டர் தண்ணீருடன் கொதிக்க விட்டு அது 1 லிட்டர் தண்ணியாக வரும் வரை கொதிக்கவைத்து பின்பு அதனை உட்கொள்வதன் மூலம் சிறுநீர் அடைப்பு, சிறுநீர் வரும் பாதையில் கற்கள் அடைத்து கொண்டு சீறுநீர் வராமல் இருக்கும் நிலை ஆகியவை சீராக்க உதவிசெய்யும்.
- இச்சாற்றை காலை, மாலை இரு வேளைகளிலும் சரியான அளவில் குடித்து வர கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.
ரணகள்ளி தாவரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!
தீமைகள்:
- மூலிகை நாம் எடுத்து கொள்வதால் நமக்கு பயன்கள் இருந்தாலும் சில முரண்பாடுகள் ஏற்படுகிறது. இந்த மூலிகையை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் எடுத்து கொள்வதால் தனிப்பட்டவரின் உடல் தன்மையை பொருத்து உடல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
- மூலிகையின் கசப்பு தன்மை சிலருக்கு குமட்டல் , இரைப்பை அலர்ஜி , வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்படும். வயிற்று புண்கள், இரைப்பை அலர்ஜி உள்ளவர்கள் இந்த மூலிகை எடுத்து கொள்ளும் போது மருத்துவரை அணுகி எடுத்துக்கொள்ளவது நல்லது. ஏனென்றால் நமக்கு எதிர்மறையான எதிர்விளைவுகளை தவிர்த்து கொள்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |