கரிசலாங்கண்ணி நன்மைகள் | Karisalankanni Keerai Health Benefits

Advertisement

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள் | Karisalankanni Benefits

Karisalankanni Keerai Health Benefits:- இவ்வுலகில் பலவகையான மூலிகை செடிகள் இருக்கின்றன. அந்த மூலிகை செடிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் கரிசலாங்கண்ணி நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? காயகற்ப பயிற்சி உடலுக்கு எவ்வளவு நன்மைகளை வழங்குமோ. அதே அளவிற்கு இந்த கரிசலாங்கண்ணி கீரை உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதன் காரணமாகவே இந்த கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை என்றும் சொல்கின்றன. இந்த கரிசலாங்கண்ணி கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணமாக்குகிறது. அதாவது மஞ்சள் காமாலை, இரத்த சோகை என்று பலவகையான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல் அழகு சார்ந்த விஷயங்களில் இந்த கரிசலாங்கண்ணி கீரை கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. சரி இந்த கரிசலாங்கண்ணி கீரை நன்மைகள் பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

நீர் – 85%, மாவுப்பொருள் – 9.2%, புரதம் – 4.4%, கொழுப்பு – 0.8%, கால்சியம் – 62 யூனிட், இரும்புத் தாது – 8.9 யூனிட் மற்றும் பாஸ்பரஸ் – 4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

கோவைக்காய் மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள் – False Daisy Benefits

கரிசலாங்கண்ணி பயன்கள் (Karisalankanni Uses) – இரத்த சோகை குணமாக:-

சிலருக்கு கை, கால் மற்றும் பாதங்கள் வீங்கி, கண், முகம் வெளுத்து சிறுநீர் தடையுடன் கடுமையான இரத்த சோகை பிரச்சனை இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அதாவது ஒரு கைப்பிடியளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அதனுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலம் இந்த கடுமையான இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

கரிசலாங்கண்ணி பயன்கள் – சளி குணமாக:-

Karisalankanni Medicinal Uses:- பொதுவாக குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எனவே கரிசலாங்கண்ணி இலையின் சாறு பத்து சொட்டுகள் மற்றும் தேன் பத்து சொட்டு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த சாற்றினை வெந்நீரில் கலந்து தங்கள் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் சளி இருமல் பிரச்சனை குணமாகும்.

கரிசலாங்கண்ணி பயன்கள் – மஞ்சள் காமாலை நோய் குணமாக:-

Karisalankanni Keerai Benefits – மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் இதனை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் 50 மில்லி பசும்பாலில் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தும் போது பத்தியம் கடைபிடிக்க வேண்டும். அதாவது புளி, காரம் மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணி பயன்கள் – இளநரை சரியாக – Karisalankanni Oil Benefits in Tamil:

karisalankanni oil benefits in tamil – இப்போது பலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் இளநரை. இந்த பிரச்சனை சிறு வயதிலேயே இப்பொழுது பலர் சந்திக்கின்றன. இந்த இளநரை பிரச்சனைக்கு கரிசலாங்கண்ணி கீரை சிறந்த சிகிச்சை அளிக்கின்றது. அதாவது கரிசலாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வடைகளாக தட்டி காயவைத்து கொள்ள வேண்டும். அதாவது வெயிலில் காய வைக்காமல் நிழலில் உலர்த்த வேண்டும்.

சற்று ஈரப்பதம் இருக்கும் போது சுத்தமான தேங்காயெண்ணெயை வாணலியில் காய்ச்சி அதில் இந்த வடைகளை போட்டு வெடிப்பு அடங்கியதும் இறக்கி விடுங்கள். இந்த எண்ணெயை (karisalankanni oil benefits in tamil) தினமும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தலாம் அல்லது தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். இவ்வாறு செய்வதினால் இளநரை பிரச்சனை வராமல் தடுக்கலாம். அதேபோல் கூந்தல் நல்ல அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும்.

கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் – Karisalankanni Powder in Tamil:

Karisalankanni Keerai Benefits – இந்த கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய் இவை இரண்டையும் தனியாக பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியினை ஒரு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியுனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு 1 1/2 டம்ளர் நீரில் இந்த கலவை மற்றும் வெல்லம் ஆகியவரை சேர்த்து நன்றாக கொத்தி வைக்கவும். கலவை நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி தேநீராக அருந்தலாம். இந்த தேநீரை தினமும் தயார் செய்து அருந்தி வர உடலில் எந்த ஒரு வியாதிகளும் வராமல் தடுக்கும். மேலும் பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் நம்மை அணுகாது.

40 கீரை வகைகள் அதன் பயன்களும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement