கற்பூரவள்ளி இலையின் மருத்துவ பயன்கள்..! Karpooravalli Uses In Tamil..!
Karpooravalli Leaf Benefits In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் பல மருத்துவ குணம் வாய்ந்த கற்பூரவள்ளி இலையின் பயன்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். நம் இந்திய நாட்டில் தான் அதிகளவு மூலிகை செடிகள் வளர்ந்து வருகின்றன. இவற்றில் பல மூலிகை சார்ந்த செடிகள் நம் வீட்டிலும், வெளி புறங்களிலும் வளர்ந்து வருகின்றன. ஆனால் வளர்ந்துள்ள மூலிகை செடியின் மருத்துவ குணம் பற்றி அறியாமலே பலர் இருக்கிறோம். கற்பூரவள்ளி இலையினை நாம் கிருமிநாசினி என்றும் கூட சொல்லலாம். இதனால் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் சேர்த்து கற்பூரவள்ளி இலையையும் வளர்த்து வந்தனர். துளசி மற்றும் கற்பூரவள்ளி இலை இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கக்கூடியது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பூரவள்ளி இலையானது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
கற்பூரவள்ளி(karpooravalli benefits in tamil) இலையில் அதிக கார தன்மை கொண்ட நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. கற்பூரவள்ளி இலையை நாம் அப்படியே எடுத்தும் கூட மென்று சாப்பிடலாம். இல்லையென்றால் தேனுடன் சேர்த்தும் கூட சாப்பிட்டு வரலாம். இதன் இலையை கையால் தொட்டு நுகர்ந்து பார்த்தால் ஓமத்தின் மனம் இருக்கும். சரி வாங்க ஃப்ரண்ட்ஸ் இப்போது கற்பூரவள்ளி இலையின் மகத்துவ குணங்களை பற்றி விரிவாக படித்தறியலாம்..!
சளி/ காய்ச்சல் மற்றும் பல நோய் நீங்க:
வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் சளி, காய்ச்சல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்று. இது போன்ற பிரச்சனைகள் எளிதில் நீங்குவதற்கு கற்பூரவள்ளி இலையை நன்றாக கசக்கி பிழிந்து அந்த இலையின் சாற்றை மூக்கில் நுகர தீராத மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
மேலும் காய்ச்சலுக்காக பல மாத்திரைகள் போடுவதை தவிர்த்து கற்பூரவள்ளி இலையினை நன்கு கசக்கி அதன் சாற்றை நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் தடவி வர காய்ச்சலானது உடனே நீங்கிவிடும்.
வறட்டு இருமல்/ தொண்டை கட்டு நீங்க:
வறட்டு இருமல், இருமலால் ஏற்பட்ட தொண்டை கட்டு பிரச்சனை நீங்க, இதன் இலை சாருகளில் சில சொட்டுகளை தொண்டையில் படும்படி அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு நீங்கிவிடும்.
தோல் சம்மந்த நோய்கள் நீங்க:
நுண்கிருமி தொற்றால் நம் உடலின் தோல் பகுதிகளில் சிலருக்கு படை, அரிப்பு, சொறி போன்ற நோய்கள் இருக்கும். இதன் தீர்வான கற்பூரவள்ளி இலையினை பறித்து நன்றாக கசக்கி அதன் சாற்றை தோலில் பாதிப்பு அடைந்த இடத்தில் தடவிவர தோல் சம்மந்த அரிப்பு பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
எலும்பு / மூட்டு தேய்மானம் குணமாக:
ஆஸ்டியோபோரோசிஸ்(Osteophorosis) என்பது எலும்பு மற்றும் மூட்டு தேய்மானத்தை குறிக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகள் தேய்மானத்தை ஏற்படுத்தும். கற்பூரவள்ளி இலைகளில் எலும்பு மற்றும் மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்ற வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ளது.
கற்பூரவள்ளி இலையினால் செய்த தைலத்தை எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் பகுதிகளில் தேய்த்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோயிலிருந்து விடுபட கற்பூரவள்ளி:
இப்போது உலகளவில் அதிகம் பாதிப்படைவது புற்றுநோய்களால் என்பது தான். கற்பூரவள்ளி இலையில் நிறைந்திருக்கும் ஒமேகா 6 வேதிப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
மன அழுத்தம் / படபடப்பு தன்மை நீங்க:
ஒரு சிலர் தேவையற்ற விஷயங்களுக்கு அதிக பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு மனதில் அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி இலை செடிகளின் வாசனையை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு இலையில் இருக்கக்கூடிய ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தம், படபடப்பு தன்மையை போக்கும்.
சிறுநீரகத்தில் சேரும் உப்பை கரைக்கும் கற்பூரவள்ளி:
நமது இரத்தத்தில் உள்ள அதிகமான உப்பு மற்றும் இதர பொருளை சுத்தம் செய்து கழிவுகளை சிறுநீரகம் வழியாக உடலில் இருந்து வெளியேற்றம் செய்கிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளி சிறுநீரகத்தில் அதிகளவு சேரும் உப்பினை கரைத்து சிறுநீரக பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ஆஸ்த்மா நோய் குணமாக:
சுற்றுச்சூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுக்கள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிப்பதால் சிலருக்கு ஆஸ்த்மா நோய் வர வாய்ப்புள்ளது. ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சு திணறல் ஏற்படும். ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் தினமும் கற்பூரவள்ளி இலையின் சாற்றை தேன் அல்லது பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்த்மா நோயால் ஏற்படும் மூச்சு இரைப்பு பிரச்சனை நீங்கும்.
நுரையீரல் புற்றுநோயை தடுக்க:
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து சுவாசிக்கும் போது சிரமத்தை ஏற்படுத்துகிறது. நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. கற்பூரவள்ளி இலையின் சாற்றை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின்பு அவற்றை அருந்தி வர புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள், மாசுக்கள் நீங்கிவிடும். குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டே இந்த முறையை பாலோ செய்தால் எந்த பலனும் கிடைக்காது.
அஜீரணம் / நெஞ்செரிச்சல் குணமாக:
சிலருக்கு சில வகையான உணவுகள் அதிக அளவில் எடுத்துக்கொள்வதாலும், சிலர் நேரம் கடந்து சாப்பிடுவதாலும் உடம்பில் அஜீரணம், நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் கற்பூரவள்ளி இலை சாற்றினை சிறிதளவு அருந்தினால் அஜீரண மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |