கத்திரிக்காய் நன்மைகள்
இன்றைய பதிவில் கத்திரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தான் பார்க்க போகிறோம். கத்திரிக்காய் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சில நபர்களுக்கு கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் சாப்பிடும் உணவு பொருட்களில் என்னென்னெ நன்மைகள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவுகளில் எல்லா வகையான சத்துக்களையும் எடுத்து கொள்ள வேண்டும். நம் உடம்பில் எல்லா வகையான சத்துக்கள் இருந்தால் தான் ஆரோக்யமாக இருக்க முடியும். அந்த வகையில் கத்திரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ வெண்டைக்காய் பயன்கள்
எலும்பு பலம் பெற:
கத்தரிக்காவில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து உள்ளது. அதனால் கத்தரிக்காவை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெரும். சிறு வயதிலே எலும்பு பிரச்சனை வருகிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடைகிறது. இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு கத்தரிக்காவை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இரத்த சோகை தடுத்தல்:
கத்தரிக்காவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதனால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
உடல் எடை குறைய:
கத்தரிக்காயில் கொலஸ்ட்ரால் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இதய பிரச்சனை:
கத்தரிக்காவில் கொழுப்பு குறைவாக இருப்பதால் இதய பிரச்சனை வராமல் தடுக்கிறது. இதய பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடும் உணவுகளில் கத்தரிக்காய் சேர்த்து கொள்ளலாம்.
நினைவாற்றல் அதிகரிக்க:
கத்தரிக்காயில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளது. இதனால் உணவில் கத்திரிக்காயை சேர்த்து கொள்வதால் நினைவாற்றலை அதிகரிக்கும். பலருக்கும் ஞாபக மறதி இருக்கும். குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க கத்திரிக்காய் சாப்பிடலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்க:
கத்தரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை பாதுகாக்கிறது மற்றும் நோய்களிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது. புற்றுநோய் செல்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Heath Tips In Tamil |