காயகல்பம் பயிற்சியின் நன்மைகள்

kayakalpa yoga exercise in tamil

 

காயகல்பம் பயிற்சி 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் காய கல்பம் பயிற்சியை பற்றித் தான்தெரிந்து கொள்ளப்போகிறோம். காயகல்பம் என்பது மருந்தல்ல அது ஒரு யோகா பயிற்சி ஆகும். காயகல்பம் என்பது நீண்ட ஆயுள் தர கூடியது.  இவை பெரும்பாலும் சித்தர்கள் செய்துவரும் பயிற்சி என்றும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்து வந்ததற்கு காயகல்பமே முக்கியமான பயிற்சியாக இருந்திருக்கிறது. மரணமில்லா பெரும் வாழ்வு காயகல்பம் பயிற்சியினை கர்ப்பதே என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நம் முன்னோர்கள் காயகல்பம் பயிற்சி செய்வதினால்  பல நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீடிக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. இயற்கையான தூண்டுதல்களை இயற்கையாகவே கட்டுப்படுத்த காயகல்ப பயிற்சியால் கட்டுப்படுத்த முடியும். மேலும் காயகல்பத்தின் பயன்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க……

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

காயகல்பம் செய்வதால் உடலுக்கும் மனத்திற்கும் ஏற்படும் நன்மைகள்:  

காயகல்பம் என்பது அறிவியல் பூர்வமான யோகா பயிற்சி முறையாகும். காயகல்பத்தில் மொத்தம் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன. ஒன்று அஸ்வினி முத்திரை மற்றொன்று நரம்பூக்கள் முத்திரை  இவை இரண்டும் ஓஜஸ் என்றும் அழைக்கப்படுகிறது.  இதனை காலை மற்றும் மாலைகளில் இரண்டு முறைகளில் செய்யவேண்டும். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது நம் உடலை பகுத்து கொண்டு வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதியாக இருக்கிறது. காயகல்பம் செய்வதால் உடலுக்கு அதிக மாற்றங்களையும் தருகிறது. அவை என்னவென்று  பார்க்கலாம்.

 • இளமைகாத்து மனவளம் பெருகி, நோயின்றி  நீண்ட நாள் வாழ்வதற்கு தமிழ்நாட்டு சித்தர்கள் கையாண்ட காயகல்பம் பயிற்சி ஆகும்.
 • இந்த பயிற்சியினை இரண்டு வேலைகள் செய்து  வருவதால் நீண்ட காலமாக இருந்த நோய்கள் எல்லாம் படிப்படியாக  குறைந்து வரும்.
 • மாணவர்களுக்கு உயிராற்றல் வீணாவதற்கு  தடுக்கிறது.
 • மூளையின் செல்கள் உறுதி பெற்று நினைவாற்றல் பெருக்கம் அடைகிறது.
 • கல்வியில் தேர்ச்சி பெறவும் உதவி புரிகிறது.
 • இரத்த அழுத்தம் சீராகவும் இந்த ஆசனம் உதவுகிறது.
 • சர்க்கரை நோயும் குணமாகும்.
 • சளி தொல்லைகளும் குணமாகும்.
 • ஆண்மை குறைவு குணமாகும்.
 • மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண் சரியாகும்.
 • நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை சரியாகும்.
 • மூலம் மற்றும் மலச்சிக்கல் சரியாகும்.
 • ஒருபக்க தலைவலி, இருபக்க தலைவலி போன்ற தலைவலி பிரச்சனைகள் குணமாகும்.
 • ஆஸ்துமா மற்றும் இருதய நோய்கள் குணமாகும்.
 • கண்களில் வரும் பிரச்சனைகளை சரிசெய்யவும் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 • உடல்சோர்வு மற்றும் பசியின்மை போன்றவை சரியாகும்.
 • முகம் பொலிவு பெற்று இளமை தோற்றம் அடைவதற்கும் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அஸ்வினி முத்திரையின் நன்மைகள்: 

 

 ashwini muthirai benefits in tamil

அஸ்வினி முத்திரையை  மகா முத்திரை என்றும் யோகா நூல்கள் கூறுகின்றது. காயகல்பம் முறைகள் அஸ்வினி முத்திரையை பயிற்சி முறையாக கொண்டு ஆயுளை நீடித்துக் கொள்ளலாம்.  காயகல்பம் செய்து  வந்தால் இவன் வாழ்நாளை கணக்கிட வயதுரைப்பவர் யாருமில்லை என்கிறார் பாரதியார்.

 • காயகல்பம்  பயிற்சியில்  அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வருவதினால் நரம்பு மண்டலம் பலம்பெற்று மூளை செல்களும் நாளமில்லா சுரப்பிகளும் பலம்  பெருக்கின்றன.
 • அஸ்வினி முத்திரை என்பது ஆண்மை அதிகரிக்கும் முத்திரையாகும். அஸ்வினி முத்திரை செய்வதால் ஆண்  மட்டுமில்லை பெண்களுக்கும் ஒரு முக்கியமான பயிற்சியாகும்.
 • இந்த முத்திரை செய்வதால் உடல் பலம் பெரும்.
 • அஸ்வினி முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறலாம்.
 • இந்த முத்திரையை செய்வதால் மலச்சிக்கல், மூலம், ஆசனவாயில் வெடிப்பு, பவித்திரம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு இந்த ஆசனம் உதவி புரிகிறது.
 • அதுமட்டும் இல்லாமல் ஆசனவாயின் தசையும் வலுவடைந்து, பெண்களின் கருப்பை வலுப்பெறுகிறது.
 • இந்த முத்திரையை செய்யும் பொழுது  நாடி நரம்புகளில்  உயிரோட்டத் தடைகள்  இருந்தால் நீக்கிவிடும்.
 • பால் உறுப்புகளும், பால்  சுரப்பிகளும் வலுப்பெறுகின்றன.
 • குழந்தை பிறப்பு மற்றும் பாலுறுப்பு பிரச்சனைகள் நீக்குகின்றன. இதனால் வித்துக்குழம்பு ஓஜஸ்  அலையாக மாறுகிறது.
 • இரசாயன குழப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும்   குணமாகும்.
 • அஸ்வினி முத்திரை செய்வதால் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகரிக்கும்.

அஸ்வினி முத்திரை செய்யும் முறை: 

ஸ்டேப்: 1

முதலில் அஸ்வினி முத்திரையை  செய்வதற்கு பத்மாசனம் அல்லது வஜ்ராசனம், சுகாசனம்  வடிவில் அமர வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலில் கூட அமர்ந்து செய்யலாம்.

ஸ்டேப்: 2

சுகாசன நிலையில் அமர்ந்த பிறகு கண்களை மூடி  பத்து வினாடிகள் மூச்சி பொறுமையாக இழுத்து விடவேண்டும்.

ஸ்டேப்: 3

பிறகு கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைத்து கொண்டு கண்களை மூடி, ஒரு ஐந்து முறை  மெதுவாக மூச்சி இழுத்து  விடவேண்டும். பிறகு மூச்சை உள்  இழுக்கும் பொழுது ஆசன வாய் உள் இழுத்து விடவேண்டும்.

ஸ்டேப்: 4

பத்தமாசன வடிவில் அமர்ந்து கால்களை மடக்கி கொண்டு கண்களை மூடி மூச்சை இழுத்து விடவேண்டும். மூச்சை இழுக்கும் பொழுது ஆசனவாய் மேல் இழுத்து  விடவேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்