வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிழங்கான் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?

Updated On: June 10, 2025 5:06 PM
Follow Us:
Kilangan Fish in Tamil
---Advertisement---
Advertisement

Kilangan Fish in Tamil..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று இந்த பதிவில் கிழங்கான் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். மீன் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு அசைவ உணவு ஆகும். நம் நாட்டில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கிழங்கான் மீன்.

மீன்களில்  பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது கிழங்கான் மீன் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. புரோட்டீன் அதிகமுள்ள மீன்களில் இந்த கிழங்கான் மீனும் ஒன்று. குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி கொடுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனால், வெயில் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க வெயில் காலங்களில் அதிகமாக வாங்கி சமைப்பார்கள்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

கிழங்கான் மீன்:

இந்த கிழங்கான் மீன்கள் 2 வகைகளில் உள்ளன.

  1. நாய்க் கிழங்கான் மீன் அல்லது கருப்பு கிழங்கான் மீன்
  2. வெள்ளை கிழங்கான் மீன்

நாய்க்கிழங்கான் மீன் தடிமனாகவும், கருப்பு நிறம் கலந்தும் மற்றும் ஒரு அடி நீளத்திலும் இருக்கும். அதேபோல், வெள்ளை கிழங்கான் மீன் வெண்மை நிறத்திலும் ஒரு ஜாண் நீளத்திலும் இருக்கும். இந்த கிழங்கான் மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மீனில் உள்ள சத்துக்கள் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

கிழங்கான் மீன் நன்மைகள்: 

இந்த கிழங்கான் மீன் சாப்பிடுவதால் மூல நோய் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது. இது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

இந்த கிழங்கான் மீனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவதால் மூலம் போன்ற உபாதைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ கானாங்கெளுத்தி மீன் பயன்கள்

இந்த கிழங்கான் மீன் அதிகளவு குளிர்ச்சி தன்மை உடையது. மூலநோய் உள்ளவர்கள்  கிழங்கான் மீன் சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் அளிக்கிறது.

கிழங்கான் மீன் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயை குணப்படுத்துகிறது. மற்றும் இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும், இந்த மீன் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

இந்த மீன் சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான அரிப்பு, தோல் வறட்சி போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது. வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீன் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தருகிறது.

இந்த மீன்கள் சாப்பிடுவதால் வாதநோய்கள் வராமல் தடுக்கலாம். கிழங்கான் மீன் வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவதால் மாரடைப்பு, இதயக்கோளாறு போன்ற இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

இந்த மீனில் புரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால் இதஹனை குழந்தைகள் எடுத்து கொள்வதன் மூலம் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இவற்றிக்ள் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் போன்றவை நிறைந்திருப்பதால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

கிழங்கா மீன் தீமைகள்:

கிழங்கா மீன் ஆரோக்கியமானது என்றாலும் கூட சில பேருக்கு தீமைகளை ஏற்படுத்துகிறது. இந்த மீனை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், தாய்மை அடைய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கிழங்கா மீனை எடுத்து கொள்ள கூடாது.

இந்த மீனில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையின் படி எடுத்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now