கொடுவா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரியுமா..?

koduva meen

Koduva Meen Benefits in Tamil

அனைவர் வீட்டிலும் மீன்கள் சமைப்பது உண்டு. அத்தகைய மீன்களை வெவ்வேறு விதமாக சமைத்து சாப்பிடுவார்கள். அதுமட்டும் இல்லாமல் மீன்களில் நிறைய வகைகளும் இருக்கிறது. அந்த வகைகளில் ஒன்றான கொடுவா மீன் பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த மீன் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இந்த மீன்களை நாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்

கொடுவா மீன்:

கொடுவா மீன்

மீன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த ஒரு அசைவ உணவாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இதில் வைட்டமின் D, வைட்டமின் E, கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

இந்த மீன் உவரிநீரில்  வாழக்கூடியது. இது 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியதாகும். கொடுவா மீனின் மேற்பரப்பில் சாம்பல் மற்றும் வெள்ளி நிறத்திலும் மற்றும் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

இதில் 7 முதல் 10 வரையிலான செதில்கள் இருக்கும். இத்தனை சிறப்புக்கள் கொண்ட கொடுவா மீன் தமிழ்நாட்டை விட அயல்நாடுகளில் அதிகமாக சாப்பிடுகின்றனர்.

மத்தி மீன் பயன்கள்

கொடுவா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: 

கொலஸ்ட்ரால் குறைக்க:

கொலஸ்ட்ரால் குறைக்க

கொடுவா மீனில் கொழுப்புசத்து மிகவும் குறைவாக இருப்பதால் இதனை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொலஸ்ட்ராலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது.

மூளை:

idhayam

கொடுவா மீனை நாம் சாப்பிடும் போது இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் முக்கியமான உறுப்புகளாக கருதப்படும் மூளை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.

கண் பார்வை:

கண் பார்வை

இந்த மீனில் இருக்கும் வைட்டமின் E சத்து கண் பார்வை அதிகரிக்கவும் மற்றும் கண்களில் எந்த விதமான குறைபாடுகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க நல்ல பலனை தருகிறது.

சருமம் மென்மையாக:

சருமம் மென்மையாக

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் மீன் எண்ணெய் ஆகிய இரண்டும் இருக்கிறது. அதனால் இந்த கொடுவா மீனை நாம் சாப்பிடும் போது நமது சருமத்தை பாதுகாப்பாக வைக்கவும் மற்றும் சருமத்தை மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

எலும்பு சத்து அதிகரிக்க:

எலும்பு

கொடுவா மீனில் கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் காணப்படுவதால் இதனை நாம் சாப்பிடும் போது நமது உடலின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. 

சால்மன் மீன் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil