குமட்டிக்காய் நன்மைகள் | Komatikai Benifts In Tamil
இன்றைய பதிவில் குமட்டிக்காய் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். குமட்டிக்காய் என்பது ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த வகை செடி அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. இதற்கு ஆற்றுதும்பட்டி,கொம்மட்டி , பேய்கும்மட்டி போன்ற பல பெயர்களை கொண்டுள்ளது.இது அதிகமாக தரிசு நிலம் மற்றும் சாலை ஓரங்களில் காணப்படும்.இதன் காய் அதிக கசப்பு தன்மையை கொண்டுள்ளது. இதன் மேல்பகுதி பச்சை மற்றும் வெள்ளை கோடுகளை கொண்டுள்ளது.
மேலும், இந்த வகைகாய் தாவரத்திற்கு பூச்சிக்கொள்ளியாக பயன்படுகிறது. இதன் காய்,வேர் மற்றும் இலை ஆகிய அனைத்தும் மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. இது தலைமுடி பிரச்சனை மற்றும் வயிறு பிரச்சனை மற்றும் கருப்பை பிரச்சனை, நீர்க்கட்டி, குதிங்கால் வலி போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இன்றைய பதிவில் குமட்டிக்காய் செடியின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்கள் குமட்டிக்காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரைநோயை சரிசெய்ய உதவுகிறது. குமட்டிக்காயில் எதிர்ப்பு பண்பு அதிகமாக இருப்பதால் குமட்டிகாயை காய வைத்து பொடியாக செய்து சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் 2 முறை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதியை சரிசெய்து விடும்.
எடை குறைப்பு:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குமட்டிக்காய் விதையை எடுத்து பொடி செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
முடி உதிர்வு:

நமது உடலில் அதிக சூடு காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு குமட்டிக்காய் பொடியை வாரம் மூன்று முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடிஉதிர்வு பிரச்சனை மற்றும் தலையில் பூச்சிவெட்டு, பொடுகு போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.
குதிங்கால் வலி:
குதிங்கால் வலி பிரச்சனை இருப்பவர்கள் குமட்டிக்காய் இலையை அரைத்து நல்லண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வலி இருக்கும் இடத்தில் தடவி வருவதன் மூலம் குதிங்கால் வலியை சரிசெய்ய உதவுகிறது.
முகப்பரு:

சரும பிரச்சனை இருப்பவர்கள் முகத்தில் கரும்புள்ளிகள் முகப்பரு போன்ற பிரச்சனையை சரிசெய்வதற்கு குமட்டிக்காயை கஷாயம் வைத்து குடித்து வந்தால் சரும பிரச்சனை முற்றிலுமாக குணமாகிவிடும்.
மஞ்சள் காமாலை:
மஞ்சள் காமாலை பிரச்சனை இருப்பவர்கள் குமட்டிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
குமட்டிக்காய்பயன்படுத்தும் முறை:
குமட்டிக்காய் பொடியை பயன்படுத்தும் போது உங்களின்தேவைக்கு ஏற்ப அரப்பு பொடியை எடுத்து அதனுடன் பழச்சாறு அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து குடித்து வரலாம். மேலும், குமட்டிக்காய் இலையை அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.
குமட்டிக்காய் பொடியை சருமத்திற்கு பயன்படுத்தும் போது ஒரு ஸ்பூன் குமட்டிக்காய் பொடி அதனுடன் பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்றவற்றை சரிசெய்கிறது.
யார் பயன்படுத்த கூடாது?
குமட்டிக்காயில் கருப்பையை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் குமட்டிக்காய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இதுமட்டுமில்லாமல் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் குமட்டிக்காய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |














