கொத்தவரங்காய் நன்மைகள் | Kothavarangai Benefits in Tamil

Kothavarangai Benefits in Tamil

கொத்தவரங்காய் பயன்கள் | Cluster Beans Uses in Tamil

நம்முடைய நாட்டில் ஏராளமான காய்கறி வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு பல நன்மைகள் ஒளிந்திருக்கிறது. சிலர் உணவில் காய்கறிகளை மட்டும் ஒதுக்கிவைத்து விட்டு உணவு உண்பார்கள். அவர்களுக்கெல்லாம் காய்கறிகளின் நன்மைகளை பற்றி தெரியவில்லை என்பதுதான் உண்மை. அதிலும் பெரும்பாலோனோருக்கு கொத்தவரங்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவதுண்டு. கொத்தவரங்காயை பொரியலோ அல்லது குழம்பில் வேக வைத்து ஒரு முறை சாப்பிட்டாலோ அதன் சுவையே தனிதான். கொத்தவரங்காயின் நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால் கண்டிப்பாக அதை உணவில் ஒதுக்கமாட்டிர்கள். வாங்க கொத்தவரங்காயில் உள்ள நன்மைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..?

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்திற்கு:

 கொத்தவரங்காய் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரையிலும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது கட்டாயம். கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக கொத்தவரங்காயை சேர்த்துக்கொள்வதால் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய்க்கு உள்ளது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

உடல் எடை குறைய:

 cluster beans benefits in tamil

சிலருக்கு உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள். உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தினால் வேலை பார்க்க, நடக்க மிகவும் சிரமப்படுவார்கள். கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகளவு உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள் தினமும் உணவில் கொத்தவரங்காய் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

இரத்த சோகை குணமாக:

 kothavarangai benefits in tamil

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீரான முறையில் செயல்படுவதற்கும், உடல் எப்போதும் ஆரோக்கியமாய் இருப்பதற்கு உடலில் ரத்த ஓட்டம் என்பது சரியாக இருக்க வேண்டும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதால் தான் இரத்தச் சோகை பிரச்சனை வருகிறது. உடலில் இரத்தம் குறைவாகவோ அல்லது இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும்.

உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

நார்ச்சத்து அதிகம் கிடைக்க:

 cluster beans uses in tamil

நாம் எடுத்துக்கொள்ளும் அனைத்து வகையான உணவுகளிலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பது அவசியம். உடம்பில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலைக் குறைக்க நார்ச்சத்தானது உதவுகிறது. மேலும் கொத்தவரங்காயில் அதிகமாக புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

 கொத்தவரங்காய் பயன்கள்

தினமும் நாம் வெளியில் செல்லும் போது பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த நோய் கிருமிகளையும் நாம் எதிர்த்து போரிடலாம்.  உணவில் அதிகமாக கொத்தவரங்காயை சேர்த்து வந்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு:

 kothavarangai benefits in tamil

cluster beans benefits in tamil: சருமம் என்று சொல்லக்கூடிய வெளிப்புற தோல் நமது உடலை பாதுகாப்பதோடு, நமக்கு அழகிய தோற்றத்தையும் தருகிறது. கொத்தவரங்காய் சரும சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்கிவிடும். அதோடு முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

இதய நோய்க்கு:

 கொத்தவரங்காய் பயன்கள்

kothavarangai benefits in tamil: இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை சேர்ந்த உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது முக்கியம். கொத்தவரங்காய் சாப்பிடுவது இதயத்திற்கு மிகுந்த நன்மையை கொடுக்கிறது. கொத்தவரங்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுத்தான்.

மன அழுத்தம் குறைய:

 cluster beans uses in tamil

கொத்தவரங்காய் பயன்கள்: தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் எந்த விஷயத்திலும் அவசரமாக இருப்பதால் சிலருக்கு மனதில் பதற்றம், மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. கொத்தவரங்காயில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கொத்தவரங்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்