தினமும் குளிப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே..

Advertisement

Kulikkum Murai in Tamil

அன்றாட செய்யும் வேலைகளில் குளிப்பது மிக முக்கியமானது. தினமும் குளிக்கிறோம், அதிலும் ஒரு சில நபர்கள் இரண்டு வேலை குளிக்கின்றோம் ஏன் தெரியுமா.? உடலில் உள்ள அழுக்குகள் நீங்க, உடலில் உள்ள வெப்பம் குறைய போன்ற காரணங்களுக்காக குளிக்கிறோம். இதனை தினமும் செய்து வருகிறோம். ஆனால் சரியாக செய்கிறோமோ என்று கேட்டால் இல்லை என்றே கூறுவேன். ஏனென்றால் குளியலில் நமக்கு தெரியாத விஷயங்கள் ஒளிந்திருக்கிறது, அது என்னென்ன என்று இந்த பதிவில் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

எப்படி குளிக்க வேண்டும்:

 எப்படி குளிக்க வேண்டும்

நாம் குளியல் என்று சொல்வது குளிர்வித்தல் என்ற சொல் தான் மருவி குளியல் என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் அதிகபடியான உடல் வெப்படைவதால் தான் ஏற்படுகிறது.

தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

இரவு தூங்குவதற்கு முன் உடலில் உள்ள வெப்ப கழிவுகள் தேங்கியிருக்கும். அதனால் தான் காலையில் எழுந்து வெப்பத்தை நீக்கி உடலை குளிர்விப்பதற்காக குளிக்கிறோம்.

வெண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது தான் நல்லது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் வெந்நீரில் குளிப்பது நல்லது.

 குளிர்ந்த நீரை அப்படியே மேலிருந்து ஊற்றி குளிக்க கூடாது. இது முற்றிலும் தவறான குளியல் முறை. குளிர்ந்த நீரை கீழ் பாதம், அடுத்து முட்டி, அடுத்து இடுப்பு பகுதி, அடுத்து தலை பகுதி இப்படி தான் தண்ணீரை ஊற்றி குளிக்க வேண்டும். அப்போது தான் வெப்பம் கீழிருந்து வெளியேறி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் ஊற்றினால் வெப்பம் வெளியேறாமல் உள்ளயே இருந்து உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். 

 எப்படி குளிக்க வேண்டும்

அதனால் நம் முன்னோர்கள் காலத்தில் ஆற்றில் சென்று குளித்தனர். அப்படி குளிக்கும் போது முதலில் நம் கால் தண்ணீரில் நனையும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் நனையும். இப்போ அப்படியில்லை நான்கு சுவற்றில் உள்பகுதியில் குளிக்கிறோம்.

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் நல்லது இருக்கா..! இதுபோல் நிறைய பழக்கம் நல்லதே அளிக்கிறது

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement