குப்பை கீரை நன்மைகள் | Kuppai Keerai Benefits in Tamil

Kuppai Keerai Benefits in Tamil

குப்பை கீரை பயன்கள் | Kuppai Keerai Uses in Tamil

கீரை என்றாலே உடலுக்கு சத்து தரக்கூடிய உணவு வகையாகும். ஆனால் குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காத உணவு. கீரைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குப்பைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வளர்வதால் இந்த கீரைக்கு குப்பை கீரை என்று பெயர் வந்துள்ளது. இந்த கீரையானது சாம்பல் நிறத்திலும், சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும். நாம் இன்றைய ஆரோக்கிய பதிவில் குப்பை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

சிறுகீரை பயன்கள்

குப்பை கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

 kuppai keerai nanmaigal

குப்பை கீரையில் நார்ச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் சி சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாவுச்சத்துக்கள், புரதச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது.

புண்கள் குணமாக:

 kuppai keerai nanmaigal

உடலில் பலருக்கு புண்கள் ஏற்பட்டு அது ஆறாமல் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடும். குப்பை கீரையில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் இருக்கக்கூடிய புண்களை விரைவில் ஆற்றக்கூடியது இந்த குப்பை கீரை.

உடல் எடை குறைய:

 குப்பை கீரை நன்மைகள்

உடல் எடை அதிகமாக இருப்பதால் நம்மால் எந்த பெரிய வேலைகளையும் செய்ய முடியாது. நீண்ட தொலைவில் நடைப்பயணம் மேற்கொள்ளும் போது அதிக மூச்சு வாங்கும். உடலில் அதிக எடை கூடுவதற்கு முக்கிய காரணமே தேவையில்லாத கொழுப்புகள் சேருவதால் தான். குப்பை கீரையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும்.

குடல் புண்கள் ஆற:

 kuppai keerai benefits in tamil

நாம் காரம் சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் குடலில் புண்கள் ஏற்பட்டு விடுகிறது. காரம் சார்ந்த உணவுகளை ஓரளவிற்கு தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குடலில் உள்ள புண்கள் ஆறுவதற்கு குப்பை கீரையுடன் துவரம் பருப்பினை சேர்த்து சாப்பிட்டு வர குடல் புண்கள் விரைவில் ஆறும்.

முள்ளங்கி கீரை நன்மைகள்

நீர்க்கடுப்பு குறைய:

 குப்பை கீரை பயன்கள்

வெயில் காலம் என்றாலே பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி நீர்க்கடுப்பு பிரச்சனையானது வருவது இயல்பு. நீர்கடுப்பு பிரச்சனைக்கு நாம் முதலில் வெந்தயம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். இன்னொரு முறை குப்பை கீரையுடன் சீரகத்தை சிறிதளவு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர வெயில்காலங்களில் உண்டாகும் நீர்க்கடுப்பு முற்றிலும் குறையும்.

உடல் சூடு குறைய:

 kuppai keerai uses in tamil

உடல் சூடு பிரச்சனை என்பது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கக்கூடிய பிரச்சனை. அதிக உடல் சூட்டினால் சருமத்தில் பருக்கள், கட்டிகள், அம்மை போன்ற நோய்கள் வரும். வெயில் காலங்களில் உடலில் உள்ள சூடு குறைவதற்கு குப்பை கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டு வர உடல் சூடு குறையும். மேலும் குளிர்ச்சியான பழ வகைகளையும் உடல் சூட்டிற்கு சேர்த்துக்கொள்ளலாம்.

வீக்கம் குறைய:

 குப்பை கீரையின் பயன்கள்

வெளியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக அடிபட்டு வீக்கம் ஏற்படும். கீழே விழுந்து கை கால்களில் வீக்கம் ஏற்படும். இல்லையெனில் பூச்சிகள் கடித்தால் வீக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். இதற்கு நாம் பல மருந்துகளை போடுவோம். விரைவில் குணமடையாது. வீக்கம் குறைவதற்கு குப்பை கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர வீக்கம் வலி குறையும்.

மணத்தக்காளி கீரை பயன்கள்

நெஞ்சு எரிச்சல் குணமாக:

 kuppai keerai nanmaigal

நெஞ்சு எரிச்சல் சரியாகுவதற்கு குப்பை கீரையுடன் மஞ்சள் தூள், ஓமம் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த சாற்றினை குடித்து வர நெஞ்சு எரிச்சல் முற்றிலும் குணமாகும்.

மூட்டு வலி குணமாக:

 குப்பை கீரை நன்மைகள்

வயதாகிவிட்டாலே அனைவரும் சந்திப்பது மூட்டுவலி. இப்போது இளம் வயதினருக்கும் இந்த மூட்டுவலி பிரச்சனை இருக்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் நெடுந்தூரம் அவர்களால் நடந்து செல்ல முடியாது. உட்கார்ந்து எழுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். மூட்டு வலி சரியாகுவதற்கு குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து பருகிவர மூட்டு வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரை பயன்கள்
வெந்தய கீரை நன்மைகள்

சரும ஆரோக்கியத்திற்கு:

 குப்பை கீரை பயன்கள்

கால நிலைக்கு ஏற்ப சரும பிரச்சனையானது மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கும். வெயில் காலங்களில் முகப்பரு, ராஷஸ், சரும அரிப்பு, முக கருமை போன்ற பல பிரச்சனைகள் வரும். சருமத்தில் ஏற்படும் தழும்புகள், மரு, பருக்கள் சரியாகுவதற்கு அதன் மீது குப்பை கீரையினை அரைத்து தடவிவர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் குணமாக:

 குப்பை கீரையின் பயன்கள்

அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்சனையானது அடிக்கடி நேர்கிறது. குப்பை கீரையானது பசியினை தூண்டக்கூடிய ஆற்றல் உடையது. தினமும் இந்த குப்பை கீரையை சமைத்து உணவுடன் சேர்த்துக்கொண்டால் குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்