குப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..!

குப்பைமேனி

குப்பைமேனி மருத்துவ பயன்கள் (Acalypha Indica benefits)..!

குப்பைமேனி: நம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது. என்ன காரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு. நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து, நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும்.

காரணங்கள்:

மது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் உள்ள இரத்தம் கெட்டு போவதற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.

அறிகுறிகள்:

நம் உடலில் இரத்தம் கெட்டு போனால் என்ன நிகழும் ?… உடல் பலவீனம் குறைந்தும், எதிலும் நாட்டம் இருக்காது, உடல் மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், அதிக சோர்வாக காணப்படுவீர்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இத்தகைய காரணங்களை புறக்காரணிகள் என்று சொல்வார்கள்.

இரத்தம் கெட்டுப்போவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

நம் உடலில் இரத்தம் கெட்டுப்போனால் உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றும், உடலுள் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும், சிலருக்கு தோளில் அரிப்புகள் ஏற்படும் அல்லது நமைச்சலாக இருக்கும், எப்போதும் சோர்வாக தூக்கத்திலேயே இருப்பார்கள்.

மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும், எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை தான் இந்த குப்பைமேனி (acalypha indica benefits).

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.

சரி வாருங்கள் குப்பைமேனி இலையை (kuppaimeni uses in tamil) பயன்படுத்தி, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.

பாதாம் பயன்கள்..!Badam Benefits in Tamil..!பாதாம் சாப்பிடும் முறை..!

குப்பைமேனி பயன்கள் (Acalypha Indica Benefits)..!

அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்ய:

kuppaimeni: காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை (Acalypha Indica benefits) வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு, நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிட வேண்டும்.

இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும்.

இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.

மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும்.

மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.

10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக !!!

தோல் நோய்கள்:

kuppaimeni ilai: தோல் நோய்கள் உள்ளவராகில் குப்பைமேனி இலையுடன் (kuppaimeni benefits) சிறுதளவு மஞ்சள் வைத்து அரைத்து, அந்த தோல் நோய்கள் உள்ள இடத்தில் பூச, அனைத்து வகை தோல் நோய்களும் நீங்கிவிடும். முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

பெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும்.

இலைச்சாறு, சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும்.

வயிற்று பூச்சிகள் நீங்க:

குப்பைமேனி வேர்களை (kuppaimeni benefits) நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். இன்னும் பல எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

இந்த குப்பைமேனி இலை (kuppaimeni ilai) மருந்தை சாப்பிடும் காலங்களில் கண்டிப்பாக மது, புகை பிடித்தல் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.

10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன ?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.