வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குப்பைமேனி இலையின் தீமைகள் பற்றி தெரியுமா.?

Updated On: November 12, 2025 5:04 PM
Follow Us:
Side Effects of  Kuppaimeni in Tamil 
---Advertisement---
Advertisement

குப்பைமேனி தீமைகள் | Side Effects of Kuppaimeni in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குப்பைமேனி இலை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்/தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். குப்பைமேனி இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் குப்பைமேனி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், பலரும் தோல் நோய்களுக்கு குப்பைமேனி இலைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

என்னதான், குப்பைமேனி இலையில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்த்துக்கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். ஆமாங்க, இப்பதிவில் குப்பைமேனி பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்துகொள்ளலாம்.

குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

குப்பைமேனி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

குப்பைமேனி பொடியின் ஆரோக்கிய நன்மைகள்: இயற்கையின் குணப்படுத்தும் பரிசு |  கட்டுரைகள், குறிப்புகள் & தந்திரங்களைப் படிக்கவும் ...

வயிற்றுபோக்கு:

குப்பைமேனி இலை சாற்றினை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், மலசிக்கல் பிரச்சனை தீரும். ஆனால், இதனை அதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

அலர்ஜி பிரச்சனைகள்:

குப்பைமேனி இலையை  பயன்படுத்தும் சிலருக்கு தோலில் அலர்ஜி, ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவரின் அனுமதில் இல்லாமல், குப்பைமேனி இலையை பயன்படுத்த வேண்டாம்.

செரிமான பிரச்சனை:

குப்பைமேனி இலை பொடியை அதிகமாக உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், குப்பைமேனி இலை ஆனது, கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்டது. இதனை அதிகமாக உட்கொண்டால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலே கூறப்பட்டுள்ள பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அவர்கள் குப்பைமேனி இலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தவர்களும் குப்பை மேனி இலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குப்பைமேனி மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

குப்பைமேனி யார் பயன்படுத்தக்கூடாது.? 

குப்பைமேனி இலையை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் மருத்துவரின் அனுமதிபெற்று அதன் பிறகே பயன்படுத்த வேண்டும்.

சின்ன குழந்தைகளும் குப்பை மேனி இலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குப்பைமேனி இலை சாப்பிடலாமா.?

குப்பைமேனி இலையை சுத்தம் செய்து, அதன் சாற்றினை எடுத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சனை நீங்கும். அதுமட்டுமில்லாமல், வயிற்றில் இருக்கும் புழுக்களும் வெளியேறும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now