குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Benefits in Tamil

குதிரைவாலி அரிசி நன்மைகள் – Kuthiraivali Rice Benefits in Tamil

குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை என்று அழைக்கப்படுவது ஒரு புற்கள் வகையான சிறுதானியம் ஆகும். இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. தானியம் என்றாலே பொதுவாக உடலுக்கு அதிகளவு நன்மை அளிக்ககூடிய ஒரு உணவு பொருட்கள் ஆகும். தானிய வகைகளில் குதிரைவாலிக்கென்று தனி சிறப்பு இருக்கிறது. குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். ஏராளமான நன்மைகள் கிடைக்கும். உடலில் ஏற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சரி இந்த பதிவில் குதிரைவாலி அரசி பயன்களை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குதிரைவாலி சிறுதானியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

barnyard millet images

 1. வைட்டமின் ஏ
 2. வைட்டமின் பி
 3. வைட்டமின் சி
 4. வைட்டமின் டி
 5. வைட்டமின் கே
 6. இரும்பு
 7. மெக்னீஷியம்
 8. காப்பர்
 9. புரதம்
 10. கொழுப்பு
 11. கார்போஹைட்ரேட்
 12. பி கரோட்டின்
 13. மாவுச்சத்து
 14. கால்சியம்
 15. தயமின்
 16. ரிபோஃப்ளேவின்

குதிரைவாலி அரிசி மருத்துவ பயன்கள்..! Kuthiraivali Benefits in Tamil..!

மலச்சிக்கல் பிரச்சனை குணமாக:

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

செரிமான கோளாறு நீங்க:

அடிக்கடி சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படும், அதன் காரணமாக அதிகளவு அவஸ்த்தை படுவார்கள். அப்படி பட்டவர்கள் குதிரைவாலி அரசியில் செய்யப்படும் உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு என்ன காரணம் என்றால் குதிரைவாலியில் இருக்கும் ஸ்டார்ச் ரெசிஸ்டெண்ட் செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியும்.

சர்க்கரை நோயாளி மற்றும் இதய நோயாளிக்கு சிறந்த உணவு:

குதிரைவாலி அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை தாமதப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுவதால் நீரிழிவு நோயாளி மற்றும் இதய நோயாளிக்கு குதிரைவாலி ஏற்ற உணவாகவே இருக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்தத்தில் சக்கரை அளவு எப்போது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

சிலருக்கு உடலில் கபம் அதிகமாகி அதன் காரணமாக அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். அப்படி பட்டவர்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

பூங்கார் அரிசி பயன்கள்

சிறுநீர் கோளாறு நீங்க:

சிறுநீர் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி தங்களுடைய உணவு முறைகளில் குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். குறிப்பாக சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.

இதையும் படியுங்கள் –>கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்