Lentils Side Effects
வாரத்தில் மூன்று நாட்கள் பருப்பு சாம்பார் தான் வைத்த சாப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல் பருப்பை பல உணவுகளுக்கு சேர்த்து சமைப்பார்கள். இதனால் உணவின் சுவைஅதிகரிக்கும். மேலும் பருப்பில் பல நன்மைகள் இருக்கிறது என்று அனைவரும் அறிந்தது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பருப்பை அதிகமாக உணவில் எடுத்து கொண்டால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் பருப்பில் உள்ள சத்துக்கள், நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
பருப்பில் உள்ள சத்துக்கள்:
- கலோரிகள்: 230 கலோரி
- புரதம்: 17.9 கிராம்
- கொழுப்பு: 0.752 கிராம்
- கார்போஹைட்ரேட்: 39.8 கிராம்
- நார்ச்சத்து: 15.6 கிராம்
- கால்சியம்: 37.6 மி.கி
- மக்னீசியம்: 71.3 மி.கி
- இரும்பு: 6.59 மி.கி
- பாஸ்பரஸ்: 356 மி.கி
- பொட்டாசியம்: 731 மி.கி
- சோடியம்: 3.96 மி.கி
- துத்தநாகம்: 2.52 மி.கி
- வைட்டமின் சி: 2.97 மி.கி
- நியாசின்: 2.1 மி.கி
- பாந்தோதெனிக் அமிலம்: 1.26 மி.கி
- தியாமின்: 0.335 மி.கி
- ரிபோஃப்ளேவின்: 0.145 மி.கி
பருப்பில் உள்ள நன்மைகள்:
பருப்பு வேக வைத்தால் தண்ணீர் வெளியே வந்து குக்கரை நாசம் செய்கிறதா.! இது போல் செய்யுங்கள்
இதய பிரச்சனை:
செரிமான பிரச்சனையை சரி செய்ய:
பருப்பில் ப்ரீபயாடிக்குகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நல்லது:
ஒரு கப் சமைத்த பருப்பு உணவுகளில் 358 μg ஃபோலேட் உள்ளது. இவை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு குறைபாடுகளை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது:
பருப்பில் லெக்டின் என்ற புரதம் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. மேலும் புற்றுநோய் கட்டிகளை வளரவிடாமலும் தடுக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க:
பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
பருப்பில் உள்ள தீமைகள்:
பருப்பை அதிகமாக உவைல் சேர்த்து கொள்ளவும் போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பருப்பை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளும் போது மலசிக்கல் பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பருப்பை அதிகமாக சேர்த்து கொள்வது தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |