தும்பை பூ செடியின் நன்மைகள்
தும்பை பூ என்பது ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த வகை செடி அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. இதற்கு பாதமலர்,முடித்தும்பை ,பெறருதும்பை ,சிறுதும்பை, கழுத்தை தும்பை,மஞ்சள் தும்பை போன்ற பல பெயர்களை கொண்டுள்ளது. மருத்துவ குணம் உள்ள தும்பை பூ அதிக நறுமணத்தை கொண்டிருக்கும். இது அதிகமாக மலைப்பகுதிகளில் காணப்படும். இந்த வகை செடிகள் கோவில்களில் வளர்க்கப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த செடியில் இருக்கும் பூ ,வேர் மற்றும் இலை அனைத்தும் மருத்துவ பயனைக்கொண்டுள்ளது. இந்த வகை பூ மென்மையாகவும் ,வெண்மையாகவும் இருக்கும். மேலும், தும்பை பூ சளி இருமல், தலைவலி,தலைபாரம், நா வறட்சி,நுரையீரல் ,இரைப்பை போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. இன்றைய பதிவில் தும்பை பூ செடியின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
உடல் சூடு:

உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வயிற்று வலி மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். இதனை சரி செய்ய தும்பை பூவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு குறைந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சளி ,இருமல்:
தும்பை பூவை தேனில் கலந்து அல்லது பாலில் கலந்து குடிப்பதன் மூலம் சளி இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
செரிமான பிரச்சனை:

தும்பை பூ செரிமான பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. இது அஜீரண கோளாறு, மலசிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
தலைவலி :
தலைவலி மற்றும் தலைபாரம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தும்பை இலையை நீரில் போட்டு ஆவி பிடுத்து வந்தால் ரொம்ப நாளாக இருந்து வந்த தலைவலி கூட சரி ஆகிவிடும். இந்த பூவை நாம் ‘ உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலி குணமடையும்.
சிறுநீரக:

தும்பை பூவில் சிறுநீரக பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது . தும்பை பூ சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. ஆகையால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தும்பை பூவை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
தும்பை பூவில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற மூலக்கூறுகள் உடலில் அலேர்ஜி ஏற்படுவதை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
மாதவிடாய் பிரச்சனை:

மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு தும்பை இலை ஒரு தீர்வாக அமைகிறது. வாரத்திற்கு ஒருமுறை தும்பை இலையை நீரில் கொதிக்கவிட்டு குடித்து வருவதன் மூலம் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருபவர்களுக்கு தும்பை இலை நல்ல பலனை தருகிறது.
விஷ கடிக்கு:

தும்பை பூ, வேர் ,இலை ஆகியவற்றை தேள் மற்றும் பூச்சிக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
நுரையீரல்:
நுரையீரல் பிரச்சனைக்கு தும்பை பூ செடி ஒரு தீர்வாக அமைகிறது. தினமும் தும்பை பூவை சாப்பிட்டு வருவதன் மூலம்.இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் நுரையீரல் பிரச்சனையை தடுக்கிறது.
நா வறட்சி :

நா வறட்சி பிரச்சனை இருப்பவர்கள் தும்பை பூவை தேனில் கலந்து அல்லது பாலில் கலந்து குடிப்பதன் மூலம் நா வறட்சியை வராமல் தடுக்க முடியும்.
திருநீற்று பச்சிலை மருத்துவ பயன்கள்
இரைப்பை :
இரைப்பை பிரச்சனைக்கு தும்பை பூ மற்றும் இலையை சேர்த்து நீரில் கொதிக்கவிட்டு வாரம் ஒரு முறை குடித்து வருவதன் மூலம் இரைப்பை பிரச்சனை இருப்பவர்களுக்கு தும்பை பூ நல்ல பலனை அளிக்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |












