ஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil

Linga Mudra Benefits in Tamil

ஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை செய்முறை..!

Linga Mudra Benefits in Tamil:- விரல்களை மடக்கினால் உடலில் ஏற்படும் ஏராளமான நோய்களை குணப்படுத்த முடியும் என்று தங்களுக்கு தெரியுமா? ஆம் முடியும்.. அது தான் யோக முத்திரையின் மகத்துவம். யோக முத்திரையில் ஏராளமான முத்திரைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்கின்றது. அந்த வகையில் நமது நுரையீரலில் ஏற்படக்கூடிய அனைத்து வகை பிரச்சனைகளை குணப்படுத்த, குறிப்பாக உடலில் ஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை ஒரு சிறந்த பயிற்சியாகும். உடலில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் குறைவாக இருந்தால் நுரையீரலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். ஆகவே நுரையீரலை பாதுகாக்க லிங்க முத்திரை எப்படி செய்ய வேண்டும்? அதன் பலன்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாங்க..

லிங்க முத்திரை செய்முறை:

Linga Mudra Benefits in Tamil

லிங்க முத்திரை செய்வது எப்படி? இந்த லிங்க முத்திரை பயிற்சியை பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் நிலையில் அமர்ந்து செய்வதன் மூலம் முழு பலன்களும் கிடைக்க கூடும். இந்த நிலை அமர முடியாதவர்கள் சாதாரணமாக அமர்த்துக் கொள்ளுங்கள்.

தங்களுடைய இரண்டு கை விரல்களையும் இறுக்கமாக கோர்த்து கொள்ளுங்கள்.

ஆனால் இடது கை கட்டை விரல் மட்டும் மேல் நோக்கி இருக்க வேண்டும். அதாவது மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.

மற்ற கை விரல்களினால் தங்களுடைய கைகளின் பின்புறத்தை அழுத்த வேண்டும்.

வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலின் அடிப்பகுதியை அழுத்த வேண்டும். அதன் பிறகு வலது கை கட்டை விரலை நிமிர்த்தி, அதன் அடிப்பகுதியில் இடது கை கட்டை விரலால் அழுத்த வேண்டும்.

இவ்வாறு இரண்டு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி 45 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

குறிப்பு:

இந்த முத்திரையை வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன.

ஒரு நாளில் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். ஒரே நேரத்தில் செய்வதாக இருந்தால் அதிகாலை சூரியனின் வெப்பம் அதிகமாகும் முன் செய்யலாம்.

அல்லது 15 நிமிடங்கள் எனக் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களும் செய்யலாம்” என்று கூறுகின்றனர்.

லிங்க முத்திரை பயன்கள் – Linga Mudra Benefits in Tamil:-

  • சிலருக்கு தொடர்ந்து லேசான காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லிங்க முத்திரையை 45 நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் உடல் சூடு அதிகரித்து, அதன் பின் வியர்த்துக் கொட்டும். அதாவது, உடலின் இயற்கை சூடு 102 டிகிரி அதிகரிக்கும். காய்ச்சலை உருவாக்கிய கிருமிகள் அந்த வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து விடும்.
  • இருமலை போக்கும்.
  • ஆஸ்துமா ஜலதோஷம் நீங்கும்.
  • சைனஸ் மற்றும் பக்கவாதத்தை குணப்படுத்தும்.
  • உடல் கோளாறுகள் நீங்கும்.
  • உடலுக்கு வலிமை அளிக்கும்.
  • உடலில் ஆக்சிஜன் அதிகரிக்க உதவி செய்யும்.
  • நுரையீரலை பலப்படுத்தும்.
யோகா வகைகள் மற்றும் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்