கொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..!

கொழுப்பு கட்டி கரைய

கொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..!

சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.

சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

கொழுப்பு கட்டிகள் மறைய என்ன செய்ய வேண்டும்?

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது, அவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

கொழுப்பு கட்டி வர காரணங்கள் (Reason for kolupu katti in tamil):-

மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவை காரணங்களினால் (Reason for kolupu katti in tamil) இந்த கொழுப்பு கட்டி ஏற்படுகின்றது. சரி இதற்கான தீர்வுகளை இப்போது நாம் இங்கு படித்தறிவோம் வாங்க.

கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்..!

கொழுப்பு கட்டி குணமாக – ஆரஞ்சு பழம்:-

இந்த கொழுப்பு கட்டி கரைய (Lipoma Treatment In Tamil)- ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது.

எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

கொழுப்பு கட்டி குணமாக – கல்லுப்பு ஒத்தடம்:-

கொழுப்பு கட்டி கரைய (Lipoma Treatment In Tamil) ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர கொழுப்பு கட்டிகள் கரையும்.

கொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil) – கொடிவேலி தைலம்:-

கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.

இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.

கொழுப்பு கட்டி குணமாக உண்ணா நோன்பு:-

கொழுப்பு கட்டி கரைய  வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்