வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடல் எடையை குறைக்க உதவும் பயறு வகைகள்.!

Updated On: October 17, 2024 1:52 PM
Follow Us:
List of Legumes for Weight Loss in Tamil
---Advertisement---
Advertisement

List of Legumes for Weight Loss in Tamil | உடல் எடையை குறைக்கும் பயறு வகைகள்.! 

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் உடல் எடையை குறைக்கும் பயறு வகைகள் பற்றி கொடுத்துள்ளோம். இக்காலத்தில் சரியான உடல் அமைப்பில் இருப்பவர்கள் குறைவு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க முடியாமலும், இன்னும் ஒரு சிலர் உடல் எடையை அதிகரிக்க முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதிலும், குறிப்பாக உடல் எடையை குறைக்க முடியாமல், அவதிப்படுபவர்கள் தான் அதிகம். குறைவாக தான் சாப்பிடுவார்கள், ஆனால், உடல் எடை அதிகமாகி கொண்டே போகும்.

எனவே, அப்படி உடல் எடையை குறைக்க முடியாமல் கடினப்படுபவர்கள் இயற்கையான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் உடல் எடையை குறைக்க உதவும் பயறு வகைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் பயறு வகைகள்:

list of legumes for weight loss

பச்சை பயறு:

பச்சை பயிரில் அதிக அளவு நார்ச்சத்தும் குறைந்த அளவில் கலோரியும் உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பச்சை பயிரினை அன்றாட உணவில் மிதமான அளவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் எடை இயற்கையான முறையில் குறையும்.

வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

கொண்டைக்கடலை:

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிக அளவில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கலோரியின் அளவும் குறைவு. எனவே, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து கொள்ளலாம். கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வேகவைத்து, அதில் சிறிதளவு உப்பு, சீரக தூள் மற்றும்எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை எளிதில் குறையும்.

கிட்னி பீன்ஸ் அல்லது ராஜ்மா:

கிட்னி பீன்ஸ் என்று அழைக்கப்படும் ராஜ்மா உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. ராஜ்மாவில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ராஜ்மாவில் சாலட், சூப் போன்ற உணவுகளை செய்த்து சாப்பிடலாம்.

சிவப்பு பருப்பு அல்லது மைசூர் பருப்பு:

சிவப்பு பருப்பு என்று அழைக்கப்படும், மைசூர் பருப்பில் அதிக அளவில் நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்த அளவிலேயே கலோரியும் உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மைசூர் பருப்பு ஒரு நல்ல உணவாகும். மைசூர் பருப்பில் சூப் செய்து சாப்பிட்டு வரலாம்.

கருப்பு உளுந்து:

கருப்பு உளுந்தில் உடல் எடையை குறைக்க உதவும் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதேபோல்,  உடல் எடையை அதிகரிக்க செய்யும் கொழுப்பு சத்தும், கலோரியும் குறைவாகவே உள்ளது. ஆகையால், கருப்பு உளுந்து உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் லெமன் காபி

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now