லிச்சி பழம் பயன்கள் | Litchi Fruit Benefits in Tamil
ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கக்கூடிய லிச்சி பழம் (litchi fruit) பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. மேலும் லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் (litchi fruit) பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும். இந்த பழத்தினை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். சரி வாருங்கள் லிச்சி பழம் (litchi fruit benefits in tamil) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் காண்போம்.
மாதுளை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
Litchi Fruit Benefits in Tamil Nadu
செரிமானத்திற்கு:
லிச்சி (Lychees) அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தை உட்கொள்வதினால், செரிமானம் சீராக நடைபெறும்.
குறிப்பாக கோடைகாலங்களில் ஏற்படும் வயிற்று கோளாறுகள் போது, இந்த லிச்சி பழத்தை உட்க்கொண்டு வந்தால், அனைத்து வயிற்று கோளாறுகளும், சரியாகிவிடும்.
எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் இந்த லிச்சிப் பழம் (Lychees) அதிகளவு உட்கொள்ளவது மிகவும் நல்லது.
உடல் எடை குறைய லிச்சி பழம்:
கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கும் இந்த லிச்சி பழத்தை (Lychees) அதிகளவு உட்கொள்ளவதினால் உடல் எடையை வேகமாக குறைத்து விட முடியும்.
ஏனெனில் இந்த லிச்சி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது.
எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள இந்த லிச்சி பழம் (litchi fruit) பெரிதும் உதவுகிறது.
டிராகன் பழம் நன்மைகள் |
லோங்கன் பழத்தின் நன்மைகள் |
மார்பக புற்றுநோய்க்கு:
லிச்சி பழத்தில் (Lychees) சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு:
லிச்சி பழத்தில் (Lychees) நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் பயன்படுகிறது.
எனவே கோடைகாலத்தில் கிடைக்கும் லிச்சி பழத்தை (Lychees) அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
நாவல் பழத்தின் அருமை மற்றும் பயனை தெரிஞ்சிகோங்க..!
கண்களின் ஆரோக்கியத்திற்கு:
லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
லிச்சி பழத்தில் (Lychees) அதிகளவு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது, மேலும் லிச்சி பழத்தில் நிறைந்துள்ள சக்தி வாய்ந்த ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது.
இரத்தம் அதிகம் சுரக்க:
லிச்சி பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.
இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.
நாவல் பழத்தின் அருமை மற்றும் பயனை தெரிஞ்சிகோங்க..!
மேலும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. | Health |