லிச்சி பழம் தீமைகள்
இன்றைய பதிவில் லிச்சி பழம் சாப்பிடுவதினால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்க போகிறோம். ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கக்கூடிய லிச்சி பழம் (litchi fruit) பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. மேலும் லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் (litchi fruit) பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும்.
மேலும், இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நியாசின், ரிஃளோப்ளேவின்,போலேட் ,தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏரளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் அதிக நன்மைகள் நிறைதிருந்தாலும் சிலருக்கு அதற்கு எதிரான பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த வகையில் லிச்சி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க….
மூட்டுவலி:

லிச்சியில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளன. மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் லிச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது கீல்வாதத்தில் வலியை அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம்:
லிச்சி பழத்தில் இருக்கும் பொட்டாசியத்தின் உயர் உள்ளடக்கம் இருப்பதால் சில சமயங்களில் உயர் இரத்த அழுத்த மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம், இதனால் இரத்த அழுத்த அளவுகளில் பெரும் சரிவு ஏற்படுகிறது, இது இறுதியில் அரித்மியாவுக்கு வழிவகுக்கிறது.
தொண்டை வலி:

லிச்சி பழம் அதிகவெப்பம் நிறைந்துள்ளதால். இதை அதிகமாக சாப்பிடும்போது தொண்டைப்புண் ஏற்படக் கூடும். இதனால் தொண்டைவலி போன்ற பிரச்சனை ஏற்படக் கூடும்.
ஒவ்வாமை பிரச்சனை:
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் லிச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தோல் சொறி மற்றும் அரிப்பு பிரச்சனையை ஏற்படுத்த கூடும். லிச்சி பழங்களை உட்கொள்வதால் ஒவ்வாமை, வாய்வு, வீக்கம், வாந்தி போன்ற ஏதேனும் பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டால், இந்த சந்தர்ப்பங்களில், விரைவில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.
சர்க்கரை நோயாளி :

லிச்சி பழத்தில் இயற்கையாவே அதிக அளவு சர்க்கரை இருப்பதால், இதை அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆகையால் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்கள் லிச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மலசிக்கல் :
லிச்சி பழத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும், வெறும் வயிற்றில் சாப்பிடும்போதும் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்த கூடும். ஏனென்றால் வயிற்று வலி, வாயு பிரச்சனை, மந்தத்தன்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அறுவை சிகிச்சைக்கு பின் :
லிச்சிபழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். எனவே அறுவை சிகிச்சைக்கு பிறகு லிச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். லிச்சி பழம் சாப்பிட்டால் உங்களுக்கு பிரச்சனையை அதிகரிக்க கூடும்.
லிச்சி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?
முக்கிய குறிப்பு :
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் லிச்சி பழம் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது சிறந்தது.
| மேலும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. | Health |














