கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள் | Fatty Liver Infection Symptoms in Tamil

Advertisement

கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள் | Fatty Liver Infection Symptoms in Tamil

மனித உடலில் மிக பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். நம் உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம் போன்ற முக்கியமான சத்துக்களை உற்பத்தி செய்யக்கூடியது கல்லீரல். அதுமட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் உணவுகளை செரிமான செய்வதற்கு பைல் என்னும் நொதியை உற்பத்தி செய்கிறது. உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத சிறப்பு கல்லீரலுக்கு உண்டு. அது என்னவென்று தெரியுமா.? நோய் தொற்று அல்லது வேறு ஏதோ கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் அது தானாகவே சரி செய்து கொள்ளும் வல்லமை பெற்றது கல்லீரல்.

நம் உடலில் செரிமானத்திற்கு உதவும் பித்த நீர் முதல், இரத்தத்தை உறைய செய்யும் ரசாயனம் வரை அனைத்தும் கல்லீரல் தான் சுரக்கிறது.  அத்தகைய  கல்லீரலில்  கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம.!

கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

உடல் சோர்வு அறிகுறி:

fatty liver infection symptoms in tamil

  • நாள்பட்ட சோர்வு கொழுப்பு கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறியாகும். எனவே உங்களுக்கு அடிக்கடி  உடம்பில்  சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி கல்லீரலை பரிசோதிப்பது நல்லது.

பசியின்மை குமட்டல் காரணம்:

fatty liver infection symptoms in tamil

  • ஒரு சில நாள் பசிக்காமல் இருந்தால் இயல்பு. ஆனால் தொடர்ந்து உங்களால் சாப்பிடமுடியவில்லை என்றால் கவனிக்க வேண்டும். அதோடு குமட்டலும் இருக்கிறது என்றால் மருத்துவரை அணுகி கல்லீரலுக்கான பரிசோதனையை செய்வது நல்லது.

தலைவலி  வாந்தி:

liver infection symptoms in tamil

 

  • கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் வாந்தி, தலைவலி  மற்றும் குழப்பம் வரும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

கண் மஞ்சள் நிறம்:

 

fatty liver infection symptoms in tamil

  • சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது பிலிரூபின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரலில் சுரக்கும் மஞ்சள் நிற நிறமி. இதனை மஞ்சள் காமாலை என்று அழைக்கிறோம். இந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.

உடல் எடை குறைவது ஏன்:

fatty liver infection symptoms in tamil

  • திடீரென்று உடல் எடை குறைவதும் கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியாகும். இது ஹெபடைடிஸ் சி என்ற வைரஸ் நோயை குறிக்கும். இவை என்ன செய்யும் என்றால் கல்லீரலில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

சருமத்தில் அரிப்பு:

fatty liver infection symptoms in tamil

  • அரிப்பு பல காரணங்களால் ஏற்படும். ஆனால் கல்லீரல் பிரச்சனை பித்த நாளங்களை பாதிக்க செய்து அதன் விளைவினால் தோலில் அரிப்பு ஏற்படும். இந்த அறிகுறியும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கான  அறிகுறிகள் ஆகும்.
  • நம் உடலில் மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனையை பெறுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை களிக் செய்யவும்—

Advertisement